19 Apr 2012

அம்பேத்கர்! கம்யூனிசம்!!

தோழர் ஒருவர் எனக்கு இப்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்
அம்பேத்கர் குறித்து பெரியார்
”அவர்(அம்பேத்கர்) சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும்பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்“.
இந்து மதம் என்பதான ஆரிய – ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்ஆபாசமாகவும்அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார்.
“காந்தியாரையே ஒரு பத்தாம்பசலிபிற்போக்குவாதி என்றும்அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை "முட்டாள்களின் உளறல்கள்என்றும் சொன்னதோடுகாந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும்ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லிபல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.
 ("விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் .வெ.ரா. சிந்தனைகள், 1934).
அதன்பிறகு அவருக்கு எனக்கும் நடந்த விவாதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

Arasan S
தோழர் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அம்பேத்கரைப் பற்றி பெரியார் சொன்னதைச் சொல்லியிருந்தீர்கள்.

அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை என்னவென்று சொன்னார்.

"
கம்யூனிஸ்ட்கள் பொய்யர்கள். அந்நியக் கைக்கூலிகள்.
நேரு கம்யூனிஸ்டுகளை நம்புவது என்பது
இந்தியாவை ஆபத்தான் பாதைக்கு அழைத்துச்செல்லும்'
                                                  -
பி.ஆர்.அம்பேத்கர்
Tholar
அம்பேத்கரின் புரிதலற்ற தன்மையையும், கம்யுனிஸ்ட்கள்  அவருடைய  நம்பிக்கையையும் பெறாததே இதற்கு காரணம்.விமர்சனத்தை ஏற்கிறோம்? அதிலிருந்து நாங்கள் பாடம் கற்கிறோம்.
அம்பேத்கர் இந்து மதம், அதன் சனாதானிகளை பற்றி சொன்னதையும் கொஞ்சம் படியுங்கள் சம டெரரா இருக்கும் 
Arasan S
தோழர்!

    
புத்தர் இந்து மதத்திற்கு என்ன செய்தார் என்று இந்துக்கள் நினைக்கின்றனரோ அதைத்தான் அம்பேத்கர் செய்தார். இந்து மதம் ஆட்சி அமைப்பதில்லை. ஆனால் கம்யூனிசம் ஆட்சி அமைக்கும். அது ஒரு சமூக ஆட்சி அமைப்பு ஏற்பாடு. அதை, சமதர்மம் பேசும் கம்யூனிசத்தைர பின்னிப் பெடலெடுக்கிறார் அம்பேத்கர் அதை கவனிக்கவும்.

   
எங்களை விட அவர், உங்களுக்குத்தான் டேஞ்சர் தோழர். எங்களைப் பக்குவப்படுத்தியிருக்கிறார் அவர். அவ்வளவுதான்.

  
எங்களைவிட கிறிஸ்தவத்தையும் இஸ்லாமியத்தையும் அவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார். பாக்கிஸ்தான் உருவாக்கத்தில் கம்யூனிசத்தின் பங்கு பற்றி பேசி இருக்கிறார். அதில் KGBயின் ஈடுபாடு குறித்தும் சொல்லி இருக்கிறார்.

வாழ்க! அண்ணல் அம்பேத்கர் புகழ் வானளாவ.
Tholar
இந்து மதம் ஆட்சி அமைப்பதில்லை என்ற தங்களின் கூற்று நகைப்பாக இருக்கிறது. இருந்தாலும் தங்களின் கருத்தும் ஏற்க வேண்டிய ஒன்றுதான், இந்து மதம் ஆட்சி அதிகாரத்தின் கால்களை எப்போதும் வருடி நிற்கும். வரலாறே அதற்கு சாட்சி! சரியா?
அம்பேத்கர் உங்களை பக்குவபடுத்தவில்லை, புத்தரை போல அம்பேத்கரையும் விழுங்க பார்க்கிறீர்கள். ஆனால் சமூக மூரண்பாடுகள் மீன் முள்ளைப் போல இந்துதுவத்தின் தொண்டையில் அம்பேத்கரியம் சிக்கி உங்களை அல்லல் படுத்துகிறது.
Arasan S
"இந்து மதம் ஆட்சி அமைப்பதில்லை என்ற தங்களின் கூற்று நகைப்பாக இருக்கிறது."

எங்கே ஆட்சி அமைத்திருக்கிறது. எந்த நாட்டில் அல்லது எந்த ஊரில் என்று சொல்லுங்கள். எங்கள் மூடத்தனத்தை நினைக்கு நானும் உங்களுடன் சேர்ந்து நகைக்கிறேன்.

"இந்து மதம் ஆட்சி அதிகாரத்தின் கால்களை எப்போதும் வருடி நிற்கும்."

ஆம் நாங்கள் கால்களைத்தான் வருடிக்கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களல்லவா?
உங்களைப் போல் எங்களுக்கு வீரமாகப் போரிடத்தெரியவில்லை, எதிர்த்து நிற்கத் தெரியவில்லை அல்லவா? அப்போது வேறு வழியில்லை. கால்களைத்தானே வருடி நிற்க முடியும். ஆனால் கண்டிப்பாக காலை வாரிவிட மாட்டோம் அல்லவா? வருடித்தானே நிற்கிறோம்.

"ஆனால் சமூக மூரண்பாடுகள் மீன் முள்ளைப் போல இந்துதுவத்தின் தொண்டையில் அம்பேத்கரியம் சிக்கி உங்களை அல்லல் படுத்துகிறது. "

எங்களுக்கு அவர் தொண்டையில் சிக்கியிருக்கும் மீன் முள்தான்.
ஆனால் உங்களுக்கு மார்பிலல்லவா வேலைப்பாய்ச்சியிருக்கிறார்.
எனக்கு உள்ளே குத்தியிருக்கும் மீன் முள் உங்களுக்குத் தெரிகிறது.
ஆனால் உங்கள் முதுகிலல்ல மார்பில் குத்தியிருக்கும் வேலைப் பற்றி கவலை இல்லையா?

புத்தரை போல அம்பேத்கரையும் விழுங்க பார்க்கிறீர்கள்.
விழுங்கினால் தவறா தோழர். நாங்கள் எங்கள் தவறுகளை ஏற்கிறோம். அவரையும் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான் நாங்கள் அவரை தைரியமாக ஏற்க முடிகிறது.

நீங்கள் ஏற்பதில், ஏதோ உள்குத்து இருக்கிறதல்லவா? தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள் தோழர்.

சரி! நானும் உங்கள் வழிக்கு வரப்போவதில்லை. நீங்களும் என் வழிக்கு வரப்போவதில்லை.

ஏதோ சில விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். அவ்வளவுதான்.
Tholar to me 
  • அசோகருக்கு பின் புத்த வீழ்ச்சிக்கு காரணமான அரசுகள் யாருடையது??? தமிழகத்தில் சொழர்களின் அரசுகள் யாருடையது.. கம்யுனிஸ்ட் அரசு என்பது போல் இந்து அரசு என்று பெயரை காட்ட சொல்கிறீர்கள் போல??? இந்தியாவின் கடந்த 2500 ஆணட்டுகால வரலாற்றில் பெரும்பாதி இந்துமத ஆட்சிதானே தலைவா!!!
  • விழுங்கினால் தவறா தோழர். நாங்கள் எங்கள் தவறுகளை ஏற்கிறோம். அவரையும் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான் நாங்கள் அவரை தைரியமாக ஏற்க முடிகிறது.                       நீங்கள் புத்தரை ஏற்கவில்லை, விழுங்கிவிட்டீர்கள். இப்படி வார்த்தை ஜாலங்களில் விளையாடுவதுதான் பார்பனியத்தின் வெற்றி??  நீங்களும் நன்கு கற்றுக்கொண்டுவிட்டீர்!!!
  • ஆனால் உங்கள் முதுகிலல்ல மார்பில் குத்தியிருக்கும் வேலைப் பற்றி கவலை இல்லையா?  இது கோதரப் போராட்டம்!! புரிதலுக்கான முயற்சி. ஆனால் நீங்கள் செய்வது அழித்தொழிக்கும் வேலை. புத்தரோ அம்பேத்காரோ நாங்கள் அவரவர் நிலையில் வைத்து சமத்துவத்தை அடைவதற்கான இணைந்து நிற்கும் புள்ளியை தேட முயற்சிக்கிறோம். மார்க்சியத்தையும் அம்பேத்கரையும் இரு எதிர் துருவங்களாக மோதவைக்கும் பார்ப்பனியத்தின் சதி முறியடிக்கும் பாதை துவங்கிவிட்டது..
  • நீங்கள் ஏற்பதில், ஏதோ உள்குத்து இருக்கிறதல்லவா? தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள் தோழர்.
 நான் இயல்பாகவே ஒப்புக்கொண்டுவிட்டேன், தவறில்லிருந்து பாடம் கற்கிறோம் என்று. உங்களுக்கு ஏன் உள்குத்தாக தெரிகிறது. தங்கள் சதி வினாகிறதே என்ற கடுப்பாய் கூட இருக்கலாம்.
மாறாமல் இருப்பதற்கு ஏன் இந்த விவாதம், மாற்றம் என்பதை மிகவும் விரும்புபவர்கள் நாங்கள், நீங்களும் அப்படித்தான். ஒரு சிறிய வேறுபாடு. ஒடுக்குமுறையை நிலைநாட்ட மாறுபவர்கள் நீஙகள் (இந்துயிசம்), நாங்கள்.......!!!!!