24 Mar 2013

பரதேசி - வெல்வான்

சினிமாவுக்கென்று நான் தனி வலைப்பூவில் பதிவுகளை இடுகிறேன். எப்போதாவது கவனத்தைக் கவரும் வண்ணம் வரும் படங்களுக்கு மட்டுமே அதில் விமர்சனம் எழுதுகிறேன். அதன் லிங்க் சினிமா/டிவி: பரதேசி - வாழ விடுங்க நியாயமாரே.

பரதேசி குறித்த எனது விமர்சனத்தை அங்கே பார்க்கலாம். இந்தப் பதிவு பரதேசி திரைப்படத்தின் விமர்சனங்களை ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதற்காகப் பதியப்படுகிறது.

எனது நண்பர் ஒருவர் செஞ்சிந்தனைக்காரர், அவர் ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தார். அவரது விமர்சனத்தையும், அதற்கு எனது மறுமொழிகளையும், அந்த மறுமொழிகளுக்கு அவரது மறுமொழிகளையும் இந்த லிங்கில் காணலாம் பரதேசி - தேனீர் கோப்பையில்.

அங்கு உள்ள மறுமொழிகள் மட்டும்


//முந்திய படங்களில் ஜெயமோகனோடு இணைந்த பாலா, இந்துத்துவ பூவோடு சேர்ந்த நாராக மணந்தார். அது நம்மில் பலருக்கு குமட்டலையும், அருவருப்பை ஏற்படுத்தியது. இப்போது கூட்டணி மாறியது நல்லது என்றாலும், இன்னு`ம் இந்துத்துவ வாசம் பாலாவிடம் குறையவில்லை என்பதை இப்படத்திலும் சில காட்சிகள் உணர்த்துகின்றது. //
அப்படிப்போடு. சூப்பர், சூப்பர் தோழர். என்னடா ரொம்பநேரமா ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கேனு நினைச்சேன். செங்கண் பார்வைக்கு நல்லதெல்லாம் காவியாகப்படும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து, என் கருத்துக்கு பலம் சேர்க்கிறீர்கள். நன்றி. போ.
//அதுமட்டுமல்ல இம்மக்களுக்கு மருத்துவம் பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் உரிமையினை நிலைநாட்ட சங்கம் அமைத்துகொடுத்து போராடினார். யாருடைய கதையை எடுத்து பாலா படம் செய்திருக்கிறாரோ, அவரையே அம்மக்களுக்கு துரோகம் செய்தவராக காண்பிப்பது சரியல்ல என்பதோடு, பாலா எரியும் பனிக்காடு நாவலாசிரியர் டேனியலுக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை கண்டனத்துடன் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.//
நல்ல வக்காலத்து தோழர். இதையே சற்றுத் திரும்பி யோசித்துப் பாருங்கள். “A Wednesday” படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கமல், “உன்னைப் போல் ஒருவனில்எப்படித் திரித்து இயக்கினார்? உங்கள் சமதர்மம் எனக்குச் சமமாகவேப் படவில்லை. ஒட்டகத்தின் முதுகில் சமவெளியை எதிர்பார்க்கும் செங்கண் மாந்தர்களால்சமதர்மம்என்ற சொல், ஓட்டுக்காகவம், தாங்கள் நல்லவர்கள் என்று பசப்பிக் கொள்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்கிறது.
//தமிழகத்தின் தென்பகுதியில் ஜாதிய ஆதிகத்திற்கு எதிராக கிருத்துவ மதமாற்றம் ஒரு சமூக புரட்சியாக நடைபெற்றது என்பதும் வரலாற்று உண்மையே.//
அட்ரா, அட்ரா சூப்பர் சூப்பர். எங்க வந்து நிக்குது பாத்தீங்களா உங்க புரட்சி. சேலைய மாத்துர புரட்சி மாதிரியா மதமாற்றப் புரட்சி.
//தலித் மக்களின் அடையாளத்தை வெளிபடுத்துவதில் பாலா வேகம் காட்டாதது ஏன்?//
இதுவரை அவர் எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே தலித் மக்களின் அடையாளத்தைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. செங்கண் அல்லவா உங்களுக்கு அப்படித்தானே தெரியும்.
//படத்தில் குறைபாடு என்று பல விசயங்களை சுட்டிகாட்ட முடியும். ஆனால் கதை களமும், அதை முன்வைத்த விதமும் குறைபாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. பாலாவின் முந்தைய படங்களை விமர்சித்த அளவிற்கு இதை செய்ய வேண்டாம் என்றே தோன்றுகிறது. //
சூஅப்பா.. இப்பவே கண்ணக் கட்டுதே.
//மேலும் படம்பார்த்த தாக்கத்தில் மீண்டும் ஒருமுறை எரியும் பனிக்காட்டை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பாலா ஏற்படுத்திவிட்டார். அவ்வகையில் இம்முயற்சி வெற்றியே…!!!//
அப்ப பாலா டேனியலுக்கு துரோகம் செய்தவிட்டாரா? இல்லையா? தோழர். அவர் நல்லவரா? கெட்டவரா?
பரவாயில்லை உங்கள் செங்கண்ணுக்கு, ஒரு சில மட்டுமே காவியாகத் தெரிந்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் பாலா என்று நம்புகிறேன். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள். நன்றி.
எனக்கு செங்கண் இருப்பதாக நீங்கள் கருதினால், அது எனக்கு மகிழ்ச்சியே….
பாலா ரெட் டீ நாவலாசிரியர் டேனியலுக்கு செய்த துரோகத்திற்கும் கமல் வெட்நெஸ்டே படத்தை மாற்றியதோடு ஒப்பிடுவது தொடர்புடையதா என்று எனக்கு தெரியவில்லை.. இருப்பினும் கமலஹாசனின் உன்னைபோல் ஒருவனிலும் எனக்கு உடன்பாடுகிடையாது தோழா
கிருத்துவ மதமாற்றம் ஒரு சமூகமாற்றம் என்பதே என் ஆளமானகருத்து, சாதிய ஆதிகத்திற்கு எதிராக நடைபெற்ற புரட்சியே அது.. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களுக்கு யாராவது தென்மாவட்ட நாடார்கள் யாராவது!?!?!?! தெரிந்திருந்தால் அவரிடம் கேளுங்கள். (நீங்கள் உங்கள் தந்தையிடம் கூட கேட்டகலாம்) முந்நாள் தீண்டப்படாதவர்களான சாணார்கள் கிருத்துவத்தால் அடைந்தது என்ன வென்று…???
விவாதத்தை தொடர்வோம்
பதிவிட்டதற்கு நன்றி
தோழர், மாறாத நாடார்கள் யாரும் கீழமையடைவில்லை என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஸ்தவ மதமாற்றம் ஒரு தேவையான சமூக மாற்றம் என்பதை நான் ஏற்கவில்லை. கிறிஸ்தவத்தை ஏற்றால் முன்னேரலாம் என்பதல்லவா உங்கள் பொருள் என்றாகிவிடும்! கிறிஸ்தவத்தில் சாதிய ஆதிக்கமே இல்லை என்று நிறுவுங்கள் பார்ப்போம். அதே நீங்கள் சொல்லும் தென் மாவட்டங்களின் நிலையை நேரில் சென்று பாருங்கள். அங்கே எத்தனை திருச்சபைகள் தலித்துகளைப் புறக்கணிக்கின்றனர் என்று.
அதென்ன யாராவது என்று அத்தனை கேள்விக்குறி. கேள்விக்குறிகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
கிறிஸ்தவ மதமும் கம்யூனிச மதமும் புதிதாக இந்தியர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுத்து மேலெழுப்பி விட முடியாது. மாறாக இந்தியர்களே அவர்களை விட எல்லா மட்டத்திலும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். செவ்விழிப்பார்வையில் அது தெரியாது.
நாடார்கள் எப்படி சமுதாயத்தில் மேலெழுந்தார்கள் என்பதற்கு வரலாற்றுப் புரிதலோடு ஜெய மோகன் வணங்கான் என்ற கதையில் விளக்குகிறார். அந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன். இதைக்கூட ஒரு படமாக எடுக்கலாம். சாணார்களைப் பற்றிய உங்கள் கருத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம். (மாறாது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்) அந்தக் கதைக்கான லிங்க் இதோ http://www.jeyamohan.in/?p=12218
குறிப்பு: பரதேசி திரைப்படத்திற்கு ஞானியின் விமர்சனத்தை விமர்சித்திருக்கும் ஜெயமோகனையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். இது தான் அதற்கான லிங்க் http://www.jeyamohan.in/?p=35407
ஜி, சாணார்நாடார் சமூக வேற்றுமை இருந்த காலகட்டத்தை பேசுகிறேன். நிலவுடமை உள்ள நாடார்கள் திருவிதாங்கூர் மன்னரிடம்சாணார்கள் நாடார் என்ற பதத்தை பயன்படுத்த கூடாதுஎன்று மனுகொடுத்த காலத்தில், சாணார்களுக்க சமூக மாற்றத்தை தந்த கிருத்துவத்தை பற்றி பேசுகிறேன். இதை சமூக முன்னேற்றமாக நீங்கள் ஏற்க மறுப்பீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். இந்த வெறுப்பை பயன்படுத்திதானே ஆர்.எஸ்.எஸ் குமரி மாவட்டத்தில் அரசியல் செய்கிறது.
திருச்சபைகள் தலித்துகளை புறக்கணிப்பது ஒன்றும் புதிய செய்தியில்லையே, கிருத்துவம் இந்துமத வர்ணாசிரமத்திற்கு வீழ்ந்தது உங்கள் வெற்றிதானே, அதை கொண்டாடுங்கள். கண்டிக்கும் வேலை எங்களது தானே…..
கேள்விகுறிகளுக்கான அர்த்தம் உங்களுக்கு புரியவில்ல என்றால்??? நம்பமுடியவில்லைஉண்மையிலேயே புரியவில்லை என்றால்.. நீங்கள் இன்னம் சமுதாய அரசியலில் பாடம் கற்க்க வேண்டியது நிறைவுள்ளது…? ரஜேந்திரனிடம் இந்த கேள்வி குறிகளை காட்டுங்க.. உடனே பதில் சொல்வர்
பரதேசி பற்றி ஞானியிக்கு ஜெமோ கூறிய பதிலில் பெரிதாக ஒன்றும் இல்லை.. 1) ஜெமோ தான் சினிமாவில் சாதித்து விட்டார் என்ற தலைக்கனம் தெரிகிறது. 2) மாற்றத்திற்கான சினிமா பேசும் ஞானியை தனிநபர் வசைபாடலின் மூலம் ஜெமோ காலிபண்ணிடாரு (எனக்கும் ஞானியை பற்றி பெரிய விருப்பமெல்லாம் இல்லை). 3) தமிழ் சினிமாவின் இன்றைய இந்துமதவயப்பட்ட நிலப்பிரபுத்துவ நிலைபாடு ஜெமோவுக்கு பிடித்தம்.. ஆனால்……..
சரி ஜெயமோகனின் வணங்கான் கதை லிங்க் கொடுத்திருந்தேனே, அந்தக் கதையைப் படித்தீர்களா தோழர். சாணார்நாடார் பேதத்தைப் அப்புறம் பார்ப்போம்.
நாடார்கள் கிறிஸ்தவத்திற்கு மாறியதால்தான் சமூகத்தில் முன்னேறி, தாழ்த்தப்பட்ட வகுப்பாக இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பாக உயர்ந்தார்கள் என்பதை நம்புகிறீர்களா? இது தான் வரலாறா?
அப்படி கிறிஸ்தவத்திற்கு மாறி உயர்ந்த நாடார்கள், எப்படி உயர்ந்தார்கள்? சமூகத்தில் எப்படி அந்தஸ்துக்கு வந்தார்கள் என்று ஒரு வரலாற்றுப் பார்வையை உங்களால் காட்ட முடியுமா?
நான் மேற்குறிப்பிட்ட அந்தக் கதையில் எப்படி உயர்ந்தார்கள் என்பதற்கான வரலாற்றுக் கோடு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
பாலா டேனியலுக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற செஞ்சிந்தனையை உங்கள் செவ்விழியால் பார்த்து, செவ்வார்த்தைகளால் சொல்லியிருந்தீர்களே,
இந்த விமர்சனத்தையும் கொஞ்சம் படியுங்கள் தோழர். டேனியல் ஏன் மதமாற்றம் குறித்து தனது நாவலில் பேசவில்லை, இது துரோகமில்லையா? என்று விமர்சிக்கிறது இந்தத்தளம் http://www.tamilhindu.com/2013/03/paradesi-film-review/
·  http://1.gravatar.com/avatar/4b9f7eebaa00f49c1a224ec79f32b020?s=40&d=identicon&r=GBhagath Singh. A says:
வணங்கான் கதையை படித்தேன், அன்றைய சாணார்களின் வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தியது சிறப்பு. ஆனால் அதில் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளை முன்வைத்தாக வெல்லாம் சொல்ல முடியாது.. கதையில் வரும் வக்கீலின் காலகட்டம் மிக பிந்தையது.. ஆனால் சாணார்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் 19ஆம் நுாற்றண்டின் இறுதியிலும், 20 நூற்றாண்டின் துவக்கித்திலேயே துவங்கியது.
தானாகவே தமிழ், ஆங்கிலம் படிக்க கற்றுக் கொண்டார் என்பதெல்லாம், நம்பமுடியவில்லை.. மேலும் அவர் படிக்க கற்றுக்கொண்டது எப்படி என்பது மறைக்கப்பட்டுள்ளது என்றே கருதகிறேன். டேனியர் மதமாற்றம் செய்ததை நாவலில் பேசாமல் விட்டதாக தாங்கள் வாதிடுவதைபோல் ஜெ வணங்கான் கதையில் வணங்கானின் தந்தை கல்வி பெற்ற ரகசியத்தை சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
காலகட்டம் பிந்தையதாக இருந்தாலும், அதுவரை நாடார்கள் (சாணார்கள்!) பின்தங்கியவர்களாகவே இருந்தார்கள். தென்தமிழகத்தில் ஐயா வைகுண்டரின் போதனைகளினால் ஒரு எழுச்சி ஏற்பட்டத்தைப் போல நேசமணியின் காலத்திலும் ஒரு எழுச்சி ஏற்பட்டது.
அந்தக் கதைப்படி வணங்கான் மதமாற்றத்தால் சமூக உயர்வு பெறவில்லை. கல்வியாலேயே பெற்றான். அவனது தந்தைக்குக் கல்வியை யார் கொடுத்திருந்தாலென்ன. அந்த சமூகத்தின் எழுச்சிக்கு மதம் ஒரு பொருட்டாக இல்லை. கல்வியைக் கொடுத்ததால் மதம் மாறி நீங்கள் சொல்வதுபோல் புரட்சியை உண்டாக்கவேண்டியதில்லை. நான் கல்வியைத் தருகிறேன். நீ எனது மதத்துக்கு வா என்பது என்னமாதிரியான சேவை () புரட்சி. கல்வியைக் கொடுத்ததற்காக ஒருவன் தன் இன அடையாளத்தை மாற்றி மதம் மாறுவதுதான் மாற்றுக்களம் விரும்பும் மாற்றுக் கலாச்சாரமோ என்னவோ தெரியவில்லை.
மற்றபடி வணங்கானின் தந்தை தானாகப் படித்தார் என்பது ஏற்புடையாதாக இல்லைதான் என்றாலும், கிறிஸ்தவர்களால் தான் படித்தார் என்று மறைமுகமாகப் பொருள் கொள்ளலாகாது. யாரோ ஒருவரோ அல்லது பலரோ டீக்கடையில் அமர்ந்து அந்த பாத்திரத்திற்கு எழுத்தின் பொருளைக் கூறியிருக்கலாம் (இதையெல்லாம் பக்கம் பக்கமாகக் கூறிக் கொண்டிருந்தால் அந்தச் சிறுகதை நாவலாகிவிடும்) என்றும்கூட அனுமானிக்கலாமே.
டேனியல் மறைத்ததற்கும், ஜெயமோகன் மறைப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது தோழர். அந்த வித்தியாசத்தைக் காண்பதில்தான் நீங்கள் அக்கரையில் (மாற்று) இருக்கிறீர்கள். நான் இக்கரையில் (இயல்பு) இருக்கிறேன்.
//டேனியல் மறைத்ததற்கும், ஜெயமோகன் மறைப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது தோழர். அந்த வித்தியாசத்தைக் காண்பதில்தான் நீங்கள் அக்கரையில் (மாற்று) இருக்கிறீர்கள். நான் இக்கரையில் (இயல்பு) இருக்கிறேன்.// இக்கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்..
·  http://2.gravatar.com/avatar/5a4de6bf76ef4db72459250814b9d518?s=40&d=identicon&r=GArasan says:
தோழர் இது என் விமர்சனம். பரதேசிவாழவிடுங்க நியாயமாரே!

 


இந்த தனி மனிதன் பாலா, என்ன மாதிரியானப் படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார்? வியாபார நோக்கிலான படங்களா அவை? வரலாறைத் தவறாகச் சொல்கிறாரா? தனது் படங்களின் மூலம் கோடீஸ்வரர்களைத் திருப்திப் படுத்துகிறாரா? அரசாங்கத்துக்கு அடிவருடுகிறாரா? மக்களைப் போதையில் திளைக்க வைக்கிறாரா? அவருக்கு இயக்கத் தெரியவில்லையா? ஏதோ தான்தோன்றித் தனமாகப் படம் எடுக்கிறாரா? சமுதாயத்துக்குக் கருத்து சொல்லவில்லையா?

மேற்கண்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில், இல்லை. இல்லை. இல்லை. இல்லேவே. 

மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் நீதியே செய்திருக்கிறார். இருந்தும் ஏன் முற்போக்காளர்களின் எதிர்ப்பைச் சந்திக்கிறார்? அவர்களும் ஜீரணிக்கவொண்ணா கருத்துகளை எடுத்துச் சொல்கிறார். அதுதான் வலைப்பூ பதிவர்கள் அவரிடம் ஏதாவது குறையைக் கண்டுபிடித்துவிடக்கூடுமா என்று அலைபாய்கிறார்கள். முற்போக்காக நடிப்பவர்களுக்கும், இயல்பாகவே முற்போக்காக இருப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறதல்லவா?

பரதேசி திரைப்படம். பாலா இயக்கியிருக்கும் படங்களிலிலேயே "நான் கடவுள்" திரைப்படத்திற்கு அடுத்த சிறந்த திரைப்படம். அனைவரும் பார்க்க வேண்டியத் திரைப்படம். முக்கியமாக உழைக்கும் தொழிலாளர்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டியத் திரைப்படம் .

இந்தப் படத்துக்கான எனது விமர்சனத்தைக் காண சினிமா/டிவி: பரதேசி - வாழ விடுங்க நியாயமாரே. என்ற லிங்குக்குச் செல்லுங்கள்.  

இதுதான் அந்தப் பதிவில் நான் இட்டிருக்கும் முடிவுரை:

//படம் எல்லா வகையிலும் சிறந்திருந்தாலும், பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இசை கவனத்தைக் கெடுக்கிறது. இளையராஜா இந்தப் படத்தில் இல்லாதது ஒரு குறையே. மற்றபடி பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன.

பிதாமகன் படத்தைப் போன்ற ஒரு முடிவைச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் (ஆனால் இயல்பாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை). முடிவில்லாமலேயே முடிகிறது படம். எனினும், அப்படி முடிவில்லாமல் இருப்பதால், காண்பவர்களைச் சிந்திக்க வைக்க முடிகிறது என்றால், முடிவு சொல்லாமல் விட்டதே சிறந்தது.

உழைப்பாளர்களின் கதையைக் காட்ட, அனைவரையும் கடுமையாக உழைக்க வைத்திருக்கிறார் பாலா. 

உழைப்புக்கேற்ற கூலியைப் போராடிப் பெரும் இச்சூழ்நிலையில், உழைப்புக்கு கூலியே கிடைக்காத அந்த காலத்தில், மொத்தமாகச் சுரண்டப்பட்ட கூலித் தொழிலாளர்களின் நிலையைக் காட்டி, உழைப்பின் மதிப்புதான் என்ன என்று செஞ்சிந்தனைக்காரர்களை விட அதிகமாகச் சிந்திக்க வைக்கிறார் பாலா. நிச்சயம் நாம் இப்படிப்பட்ட படங்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற கூலியைக் கொடுக்கவிட்டாலும் (நாமும் கங்காணிகள்தானே) மதிப்பையாவது கொடுக்க வேண்டும்.//