31 May 2012

ஆஸ்துமாவுக்கு அனுபவ மருத்துவம்

                ஆஸ்துமாவின் கொடுமையை அனுபவிக்கிறவர்கள்தான் அந்த நோயின் தீவிரத்தை உணரமுடியும். மற்றவர்கள் எவ்வளவு பாசமுள்ளவர்களாக இருந்தாலும் அன்புள்ளவர்களாக இருந்தாலும், அந்த வேதனையைக்கண்டு மனம் வருந்த மட்டுமே முடியும்.
                ஆஸ்துமா ஒவ்வொரு உடல்நிலைக்குத் தகுந்த மாதிரி வித்தியாசப்படும். பருவகால சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் வரும். இரவில் மூச்சுத் திணறல் அதிகம் இருக்கும். படுத்துறங்க முடியாது. பத்து படிகள் ஏற முடியாது. பத்தடி தூரம் நடக்கவும் முடியாது. இன்ஹேலர், ஸ்டிராய்டு மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தியும், நிரந்தரமான குணம் ஏற்படுவதில்லை.
                இந்த ஆஸ்துமாவின் வேதனையை அனுபவித்த மயிலாடுதுறையைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் பி.செல்வராஜ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்நோயால் அவதிப்பட்டவர்.
                இவருக்கு ஒரு வைத்திய நண்பர் கூறிய மருத்துவமுறையைப் பயன்படுத்தி முழுமையாகக் குணமடைந்ததாகக் கூறியுள்ளார். அவர் பயன்படுத்திய மருத்துவமுறையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

                தும்பை இலை, தூதுவளை இலை, ஆடாதோடா இலை, வில்வ இலை, முசுமுசுக்கை இலை, கரிசலாங்கண்ணி இலை (வெள்ளைப்பூ உள்ளது) இவைகள் ஆறும் சம அளவும், துளசி இலை மட்டும் அதில் பாதி அளவும் (அதாவது 6 இலைகளும் 100 கிராம் என்றால் துளசி இலை மட்டும் 50 கிராம்) எடுத்துக் கொண்டு, இந்த ஏழு இலைகளையும் சுத்தம் செய்து நிழலில் காய வைத்து ஒரு நாள் மட்டும் நன்றாக வெயிலில் காய வைத்து, தூள் செய்து, 25 கிராம் தூள் எடுத்து, காய்ச்சாத பசும்பாலில் (150 மி.லி.) நன்றாகக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு குணமடைந்ததாக பேராசிரியர் முனைவர் திரு.செல்வராஜ் கூறியிருக்கிறார். ஆஸ்துமாவின் கொடுமையில் இருந்து முழுவதுமாக விடுபட்டு 16 ஆண்டுகள் ஆகிறது என்கிறார் அவர். அவரது தொடர்பு எண்: 9443336613
                சித்தர்கள் கூறிய பலவிதமான மருத்துவமுறைகளில் இதுவும் ஒன்று.
                ஆஸ்துமா நோயுள்ளவர்கள் இம்முறையைப் பயன்படுத்தி பயனடையலாம்.


B.டில்லி
சித்த வைத்தியர்
8122309822


நன்றி: உழைப்போர் உரிமைக்குரல்