தேவையான பொருட்கள்:
கொத்த மல்லி 1200 கிராம், கிராம்பு 100 கிராம், அதிமதுரம் 100 கிராம், சிறுநாகப்பூ 100 கிராம், சீரகம் 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், சதகுப்பை 100கிராம், சீனாகற்கண்டு 1200 கிராம்.
செய்முறை:
சீனா கற்கண்டு தவிர மற்ற எல்லா சரக்குகளையும் நன்றாக காயவைத்து லேசாக வறுத்து, நன்றாகத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். கடைசியாக கற்கண்டை தூள் செய்து மற்ற சரக்குத் தூள்களுடன் ஓன்று சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்று பட கலந்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிட வேண்டிய அளவு:
பெரியவர்கள் 1 தேக்கரண்டி அளவும், சிறியவர்கள் 1\2 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு இளஞ்சூடாக வெந்நீர் சாப்பிட வேண்டும்; அல்லது பால் சாப்பிட வேண்டும். 3 மாதங்கள் சாப்பிடவும். காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
செரியாமை, வாந்தி, விக்கல் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள், மயக்கம், இரத்தக்கொதிப்பு, உடல் உட்சூடு, குளிர்க்காய்ச்சல், இரத்தச் சோகை, கபம், இவைகள் சரியாகும். கண்கள் பிரகாசமடையும். புத்தி தெளிவடையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக ஞாபகத் திறன் கூடும். குழந்தை பருவத்தில எடைக் கூடுதலாகி வரும் நிலைமாறி சரியான எடை இருக்கும். தலையில் வரும் பலவிதமான நோய்கள் தீரும். தொண்டைப்புண், கழுத்தில் வரும் கண்டமாலை இவைகளும் சரியாகும். சுகமான தூக்கம் வரும். பசியின்மை தீரும். வயிற்றிலுள்ள பலவிதமான கிருமிகள் சாகும். உடல் குளிர்ச்சித் தன்மை அடையும், பில்லி, வஞ்சனை தீரும். பக்கவாதம் வராமல் தடுக்கும். உடல் நடுக்கம் வராது. சிறுநீர் பிரச்சினை, கல்லடைப்பு தீரும். நெஞ்செரிச்சல் தீரும். வயிற்றுவலி, கண்ணில் நீர் வடிதல் தீரும். தாது இழப்பும் தீரும். வாய் கோணல், வாய் குழறி பேசுதல் போன்றவையும் சரியாகும். இவை எல்லாம் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.