5 Jul 2012

கடவுள் என்ன காட்சிப் பொருளா?


இந்தப் பதிவை இடும் முன், நான் எந்த அமைப்பையும் சார்ந்தவனல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பகுதியில் உள்ள இந்து முன்னணி அமைப்பினருக்கு நான் கீழ்கண்ட துண்டறிக்கையைத் தட்டச்சு செய்து கொடுத்தேன். அந்தத் துண்டறிக்கையில் உள்ள கோரிக்கைகள் நியாயமானதாக எனக்குப் பட்டது ஆகவே, அந்த அமைப்பினரிடம் அனுமதி பெற்று அந்தத் துண்டறிக்கையைக் கீழ்கண்ட பதிவாக இடுகிறேன்.


காசு கொடுத்து தரிசனம் செய்ய கடவுள் என்ன காட்சிப்பொருளா?
சாமி கும்பிட காசு வசூலிப்பது நியாயமா?
அரசே! ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்!

-       இறைவழிபாடு செய்ய காசு வசூலிப்பது நியாயமா?
-       எவ்வளவோ இலவசம் கொடுத்து மகிழும் அரசுகள் சாமி கும்பிட காசு வாங்கலாமா? இது நியாயமா?
-       குமரி மாவட்டம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற எந்த மாநிலத்திலும் சாமி கும்பிட காசு வசூல் செய்யாதபோது தமிழகத்தில் மட்டும் கட்டணம் வாங்குவது நியாயமா?
-       கோடான கோடி உண்டியல் வருமானம் போதாதா? சாமி கும்பிடக்கூட வசூலா? இது கட்டணமா? கொள்ளையா?
-       சர்ச் கிறிஸ்தவர்களிடம்! மசூதி முஸ்லீம்களிடம்! கோவில் மட்டும் அரசாங்கத்திடமா? இதுதான் மதச்சார்பின்மையா?
-       முஸ்லீம்கள் மெக்கா செல்வதற்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்வதற்கும் மத்திய அரசாங்கம் நம் வரிப்பணத்தில் இலவசமாய் அழைத்துச் செல்கிறது. ஆனால் இந்து திருவிழாக்களுக்குச் செல்ல பேருந்துகளில் சிறப்புப் பேருந்து என்ற பெயரில் கொள்ளைக் கட்டணமா? இது தகுமா?
-       ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் மடங்களின் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்காமல் விட்டு வைத்து வேடிக்கை பார்ப்பது எந்த வகை நியாயம்? இதுதான் கோவிலை அரசாங்கம் நிர்வாகம் செய்யும் லட்சணமா?
-       குத்தகை, வாடகை பாக்கி பல கோடி ரூபாய் நிலுவையை வசூல் செய்ய அவசர சட்டம் போட்டு வசூலிக்காமல் பக்தர்களைச் சுரண்டி பிழைப்பது தான் கோவிலை அரசாங்கம் நிர்வாகம் செய்யும் அழகா?
-       கோவில் தனியார் வசம் வந்தால் ஊழல் பெருகிவிடும் என்பதை பறைசாற்றுபவர்களின் கட்சிகள் ஊழலற்ற கட்சியா? ஊழல் வழக்கு இல்லாத தலைவர்கள் உண்டா?
-       கோவிலை நிர்வகிக்க ஊழல் அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமித்தது எவ்வளவு கொடுமை? துரோகம்?



தரிசனக் கட்டணம் வசூலிப்பது
அவசியம்தானா?

-        கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற கருத்துப்படி வாழ்ந்த நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோவிலைக் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.
-        கோவிலில் வழிபாடு மற்றும் விழாக்கள் முறையாக நடக்க ஏராளமான நிலங்களை கோவிலுக்கு எழுதி வைத்து நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தித் தந்தனர்.
-        கோவில் நிர்வாகம் செய்யும் செலவைக் காரணம் காட்டி சாதாரணக் கோவில்களில் கூட தரிசனம் செய்யவும், வாகனம் நிறுத்துவது முதல் பிரசாதம் வழங்குவது வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
-        பக்தர்கள் ஆலயத்திற்குச் சென்றால் தட்சணை போடலாம். காணிக்கை செலுத்தலாம். நன்கொடை தரலாம். கட்டணம் தரவேண்டும் என்பது தர்மமா?
-        ரூ.10,000\- முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ள கோவில்கள் 4033ம், 10 லட்சம் முதல் பல கோடிகள் வரை வருமானம் உள்ள 189 கோவில்கள் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்யக் கட்டணம் வசூல் செய்வது நியாயம்தானா?
-        4,22,725 ஏக்கர் நிலத்திலிருந்து குத்தகைத் தொகையாக கோடிக் கணக்கான ரூபாய் வருமானம் வந்தும், தரிசனக் கட்டணம் வசூலிப்பது அவசியம்தானா?
-        22,599 கட்டடங்கள் மூலமாகவும் 33,267 வீடுகள் மூலமாகவும் கிடைக்கும் வாடகையில் பல கோடி ரூபாய் வருமானம் வந்தும், கடவுளைத் தரிசிக்கக் கட்டணம் வசூலிப்பது முறைதானா?
-        கேரளா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றிலும் கட்டணமே இல்லாமல் கடவுளைத் தரிசனம் செய்ய முடிகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே அது இயலாமல் போனது ஏன்?
-        மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடுகள் இலவசமாகத் தர முடியுமானால், காசு கொடுக்காமல் கடவுளைத் தரிசனம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்ய முடியாதா என்ன?
-        ஜாதி பேதமின்றி, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை பறைசாற்ற கட்டண தரிசனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துவோம்.



தமிழக அரசின் பிடியிலுள்ள மொத்த ஆலயங்கள் எண்ணிக்கை
                38,481
இந்த ஆலயத்திற்கான நன்செய், புன்செய் நிலங்களின் அளவு  
4,22,725 ஏக்கர்
வீட்டு மனைகள், கடைகள், அலுவலகங்களின் எண்ணிக்கை
66,226
நிலங்களையும், மனைகளையும் அனுபவிப்போர் எண்ணிக்கை
1,33,729
இவைகளுக்கான வாடகை, குத்தகை, மானியம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டவையே. ரூ.5\-லிருந்து, ரூ.500\- வரை ஆகும். இதன் தற்போதைய நிலவரப்படி ரூ.500லிருந்து ரூ.50,000 வரை ஆகும்.

முந்தைய குத்தகை கணக்கின்படி குத்தகை, வாடகை, மானியத்தின் பாக்கித்தொகை
 33.31 கோடி
தீர்ப்பு சொல்லப்பட்ட வழக்குகள்
 17,191
நிலுவையில் உள்ள வழக்குகள்
16,156
நீதிமன்றத்தின் மூலம் கிடைத்த நிதி
ரூ.14.86 கோடி
வரவேண்டிய தொகை
ரூ.18.45 கோடி
1999 முதல் 2010 மே மாதம் வரை 215 கோயில்களில் திருட்டுப் போன நகைகளின் மதிப்பு ரூபாய் பல கோடிகள் ஆகும்.

இதுவரை நகைகள் மீட்கப்பட்டுள்ள கோயில்களின் எண்ணிக்கை
16
திருட்டுப்போன ஐம்பொன் சிலைகள் எண்ணிக்கை
415
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் எண்ணிக்கை
25
திருவாரூர், வேலூர், தஞ்சை மாவட்டங்களிலுள்ள ஏழு சிவன் கோயில்களில் பச்சை மரகத லிங்கங்கள் திருடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சில கோடி மதிப்புள்ளது. ஒன்று மட்டுமே மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4 கோடி என்று அரசு அறிவித்துள்ளது.


நமது கோரிக்கைகள்

-        தமிழக அரசு உடனடியாக கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும்.
-       கட்சிக்காரர்கள் இன்றி சமுதாயப் பெரியோர்களைக் கொண்டு மட்டும் குழு அமைக்க வேண்டும். இதில் அனைத்துச் சமுதாய பெரியோர்களும் பங்கு கொள்ள வேண்டும்.
-        ஆலய நிர்வாகத்தின் வரவு, செலவுகள் அனைத்தும் ஆண்டிற்கு ஒரு முறை பொதுமக்களின் முன்பாக வைக்கப்பட்டு வெளிப்படையாக காண்பிக்கப்பட வேண்டும்.

குறிப்பு: மாதம் ஒரு முறை இலவச அரிசி வழங்க தமிழக அரசு 400 கோடி ரூபாய் செலவு செய்யும்போது கட்டண தரிசனத்தை ரத்து செய்ய முடியாதா என்ன?


அன்புடையீர்! வணக்கம்!!
                மதச் சார்பற்ற அரசாங்கம் எனக் கூறிக்கொண்டு சர்ச், மசூதி நிர்வாகத்தை எடுக்காமல் இந்துக் கோயில்களை மட்டும் அரசு எடுத்துக் கொண்டது. நம் முன்னோர்கள் கோவிலுக்குக் கொடுத்த சொத்துக்கள் மூலம் குத்தகை, வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்கின்றனர். அரசியல்வாதிகளிடம் நிர்வாகம் உள்ளதால் ஊழல் மலிந்துவிட்டது. உண்டியல் பணம் என்னவாகிறது? கேரளா, வடமாநிலங்களில்  கோவிலில் சாமி கும்பிட கட்டணம் வசூலிப்பது கிடையாது. அதே போல், தமிழக அரசும் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனக் கோரி ஆர்ப்பாட்டம்

22.7.2012, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை | .வெ.ரா.சாலை (மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில்)

அனைவரும் வருகை தந்து ஆதரிக்க வேண்டுகிறோம்

இவண்
இந்து முன்னணி
திருவொற்றியூர்,
அன்னை சிவகாமி நகர்