7 Jul 2012

கேள்விக்கு கேள்வி = பகுத்தறிவு!

அண்ணா பார்வையில் ஆரிய திராவிடம் என்று ஒரு பதிவை தமிழ் ஓவியா என்ற வலைப்பூவில் கண்டேன். திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய உரைகளை சிலவறைக் கொடுத்துவிட்டு சம்பந்தமேயில்லாமல், கீழே கண்டிருக்கும் "ஹிக்ஸ் போஸான்" துகள் பற்றியும் மறுமொழியாக இட்டிருந்தார்கள். நான் சில மறுமொழிகளை அவர்களுக்கு கொடுத்திருந்தேன். "ஹிக்ஸ் போஸான்" மறுமொழியையும், அதற்கு நான் கொடுத்திருந்த மறுமொழிகளையும், பதிலுக்கு அவர்கள் இட்டிருந்த மறுமொழிகளையும் தொகுத்து கீழே கொடுத்திருக்கிறேன்.

நான் அவர்களிடம் தோற்றுவிட்டேன். என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. கேள்விக்கு கேள்வியையே பதிலாக சொல்கிறார்கள். ஒரு பதிவு இட்டுவிட்டால், வாசகர் கேள்வி கேட்பார், பதிவை இட்டவர் பதில் தருவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசகரைத்தான் பதில் கேள்வி கேட்கிறார்கள். ஒரு வேளை அவர்களது மொழி எனக்குப் புரியவில்லையோ அல்லது எனக்கு அவர்கள் அளவு பகுத்தறிவு இல்லையோ என்னவோ? எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்குச் சரிசமாமாக பேசக்கூடிய யாராவது, முடிந்தால் அந்தத் வலைப்பூவிற்குச் சென்று முயற்சித்துப் பாருங்கள்.

அவர்கள் இட்டிருந்த பதிவின் கீழ் இருந்த மறுமொழியும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் இதோ


பிரபஞ்சம் உருவாக காரணமான அணுக்களை இணைக்கும் ஒட்டுப் பொருள் கண்டறியப்பட்டது இயற்பியல் துறையில் விஞ்ஞானிகள் சாதனை

ஜெனீவா அருகே செர்ன் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞான கூடம்.

ஜெனீவா, ஜூலை.5- பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், விஞ்ஞானிகள் சாதனை படைத்துள் ளனர்.
1370 கோடி ஆண்டு களுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட் களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.
எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருள்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ் வேறு திடப்பொருள் களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக் கிற தொலைக்காட்சிப் பெட்டி செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட் டர் இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப் படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

அணுக்களை சேர்க் கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன் றோடு ஒன்று ஒட்ட வைக்கும் பொருள் என்ன என்பதை கண்டு பிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடி யும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ் நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக் களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டு பிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச் சிக்கான அய்ரோப்பிய மய்யம்) ஒரு ஆராய்ச்சிக் கூடம் அமைத்து, உலக புகழ் பெற்ற விஞ்ஞானி கள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந் தனர்.

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறி யப்பட்டன. 12-ஆவது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த துகளை கண்ட றியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற புகழ் பெற்ற அணு விஞ் ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது. இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவா வில் திரளான விஞ் ஞானிகள் முன்னிலை யில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா நேற்று (4.7.2012) வெளியிட்டார். அதே நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள் தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச் சிகள் தேவைப்படுவதாக கூறினார்.
செர்ன் தலைமை இயக்குநர் ரோல்ப் ஹியர் இது பற்றி கூறுகையில், "ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வு களுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிர பஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்'' என்றார்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள ஹிக்ஸ் பாசன் துகள் என்று ஒன்று இல்லாமல், அணுக் களின் சேர்க்கையாக பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் நம்புகின் றனர்.

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற் பியல் துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை. 5-7-2012
July 5, 2012 4:32 PM


Arasan said...
இதைக் கண்டுபிடித்ததில் இந்தியரின் பங்கைக் குறித்து தெரிந்தும், அதைப் பாராட்டாமல் இருக்கதான் திராவிடம் கற்றுக் கொடுத்தது.

ஹிக்ஸ் பாசன் துகள், என்ற அந்தப் பெயரில் பாசன் என்பது போஸ் என்ற இந்திய விஞ்ஞானியைக் குறிப்பது என அந்த விஞ்ஞானக் குழுவே சொல்லியிருந்தும் அதை ஏன் வலுக்கட்டாயமாக மறைக்கவேண்டும்.

மேலும் அந்தத் துகளுக்கு கடவுள் துகள் என்ற பெயரிட்டுச் சொல்கிறார்களே அதையும் தங்கள் பதிவில் காணோமே!

வாழ்க உங்கள் திராவிடப் பகுத்தறிவு.

July 5, 2012 10:48 PM

இந்த மறுமொழிக்கு பதிலில்லை.

Arasan said...
கோவில் அறங்காவலர்கள் எல்லாம் திராவிடசிந்தனையுள்ள கட்சியின் உறுப்பினர்களாக இருப்பின் கொள்ளை நடக்கத்தானே செய்யும், கோயில் கொள்ளையரின் கூடாரமாக மாறத் தானே செய்யும்.
July 5, 2012 10:50 PM
Delete

நம்பி said...
//Arasan said...

கோவில் அறங்காவலர்கள் எல்லாம் திராவிடசிந்தனையுள்ள கட்சியின் உறுப்பினர்களாக இருப்பின் கொள்ளை நடக்கத்தானே செய்யும், கோயில் கொள்ளையரின் கூடாரமாக மாறத் தானே செய்யும். //

''
கோயில் அறங்காவலர்கள் எல்லாம் திராவிட சிந்தனையுள்ளவர்களா இருப்பின் கொள்ளை நடக்கத்தானே செய்யும்....''

அப்படியா? அப்படி என்றால் கோயில் பூசாரிகள் எல்லாம் பார்ப்பனர்களாக இருந்தால் கொள்ளையும், கொலையும், காமலீலைகளும் நடக்கிறதே அது மட்டும் ஏன்?

கடவுளின் முன்னாடியே துணியை அவுத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்களே அது ஏன்?

பார்ப்பனன் ஆட்டினால் தான் கடவுளுக்குப் பிடிக்குமா? எங்கே ''அதை'' பிடிக்கவே மாட்டேங்குதே? சும்மா ''கல்லு'' மாதிரி இருந்து கொண்டு வேடிக்கை பார்க்குதே!
July 6, 2012 12:31 PM


நம்பி said...
//Arasan said...மேலும் அந்தத் துகளுக்கு கடவுள் துகள் என்ற பெயரிட்டுச் சொல்கிறார்களே அதையும் தங்கள் பதிவில் காணோமே!...//

கடவுள் துகள்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் சரி ''எந்த கடவுளின் துகள்'' என்று சொல்லியிருக்கிறார்களா?

இந்த கடவுள் துகள்கள் என்று வந்தாலும்..இருக்கின்ற கடவுள்கள் எல்லாம் ''பொய்'' என்று ஆகிவிடுகிறதே!

இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

நீங்கள் இதுநாள் வரைக்கும் கல்லைத் தானே கடவுளாக காட்டிக் கொண்டிருந்தீர்கள்...

அதற்கு மதச்சாயமும் பூசிக் கொண்டிருந்தீர்களே! இப்போது எல்லாம் வேஸ்ட் என்றாகிவிட்டதே...????

இனிமேல் எல்லா கோவிலையும் இடிக்கலாமே!இடிக்கத் தயாரா?
July 6, 2012 12:36 PM


Arasan said...
//கோயில் அறங்காவலர்கள் எல்லாம் திராவிட சிந்தனையுள்ளவர்களா இருப்பின் கொள்ளை நடக்கத்தானே செய்யும்....''

அப்படியா? அப்படி என்றால் கோயில் பூசாரிகள் எல்லாம் பார்ப்பனர்களாக இருந்தால் கொள்ளையும், கொலையும், காமலீலைகளும் நடக்கிறதே அது மட்டும் ஏன்?//

இது எதிர்பார்த்த மறுமொழிதான். கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் ஏன் கோவில் அறங்காவலர்களாக வேண்டும். பார்ப்பானைவிட திராவிடச்சிந்தைக்காரன் ஒழுக்கமா வாழ்ந்துகாட்டிட்டுல்ல இப்படிச் சொல்லனும். உங்க தலைவர்கள் பாதிப்பேரு இரண்டு பொண்டாட்டி, மூணு பொண்டாட்டி, இப்படி சைட்ல வச்சுக்க வேண்டிய அவசியமே இல்ல.

//
கடவுளின் முன்னாடியே துணியை அவுத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்களே அது ஏன்?

பார்ப்பனன் ஆட்டினால் தான் கடவுளுக்குப் பிடிக்குமா? எங்கே ''அதை'' பிடிக்கவே மாட்டேங்குதே? சும்மா ''கல்லு'' மாதிரி இருந்து கொண்டு வேடிக்கை பார்க்குதே! //

நீங்கள் ஏன் இதை இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்தக் கல்லின் சக்திதான். அந்தப் பூசாரியை மாட்டிவிட்டதோ என்னவோ?

//
கடவுள் துகள்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் சரி ''எந்த கடவுளின் துகள்'' என்று சொல்லியிருக்கிறார்களா?//

கடவுளுக்கு எதுக்குங்க பேரு. கடவுள் அவ்வளவுதான் எனக்குத் தெரியும். வேற எல்லாம் உங்களமாதிர ஆளுங்களுக்குத்தானே அதிகம் தெரியும்.

//
நீங்கள் இதுநாள் வரைக்கும் கல்லைத் தானே கடவுளாக காட்டிக் கொண்டிருந்தீர்கள்...அதற்கு மதச்சாயமும் பூசிக் கொண்டிருந்தீர்களே! இப்போது எல்லாம் வேஸ்ட் என்றாகிவிட்டதே...????

இனிமேல் எல்லா கோவிலையும் இடிக்கலாமே!

இடிக்கத் தயாரா?//

ஏங்க, கல்லுக்குள்ளையும் "ஹிக்ஸ் போஸான்" இருக்குதுங்க. அதுதானே அறிவியல். நாங்க கோயிலெல்லாம் இடிக்க வேண்டிய அவசியம் இல்லைனு நான் நினைக்கிறேன். நீங்க!
July 6, 2012 9:43 PM


நம்பி said...
//Arasan said...ஏங்க, கல்லுக்குள்ளையும் "ஹிக்ஸ் போஸான்" இருக்குதுங்க. அதுதானே அறிவியல். நாங்க கோயிலெல்லாம் இடிக்க வேண்டிய அவசியம் இல்லைனு நான் நினைக்கிறேன். நீங்க!//

வெரி குட்! அப்புறம் ஏங்க? நீங்க அதை கண்டுபிடிக்கலை?

அதுக்கு முருகன், சிவன் என்று எவங்க பேரை சூட்டை சொன்னது..சைன்டிஸ்டா?

அல்லா, பெல்லா என்று எவங்க பேரை வைக்க சொன்னது?

எவங்க அதுக்கு கதை எழுத சொன்னது?

அதுக்கு ஏங்க பரலோகம்..பிதாசுதன்...என்று எல்லாம் பெயரு வைக்க சொன்னது?

சைன்டிஸ்டா?

எவங்க அதை இவனவன் தொடனும்னு எழுதிவைச்சது? சைன்டிஸ்டா?

சைன்டிஸ்ட் சொன்னது பூராத்தையும் நீங்களே எடுத்துக்கறீங்களே! அது எப்படிங்க?

நீங்கதானேங்க சந்திரன் கடவுள் அது கிட்டே யாரும் போக முடியாது, அது மேல எல்லாம் யாரும் கால் வைக்க முடியாதுன்னு சொன்னீங்க..அதுல கால வைச்சு..கக்கூஸ் எல்லாமே போய்ட்டானுங்களே..இப்ப சந்திர பகவான் என்ன ஆனாருங்க?

இனிமேலாவது அதை எல்லாம் தூக்கி குப்பையில போட்டுருவீங்களா?

இல்லை அதை எல்லாம் வைத்து இன்னும் புதிய புதிய கதை ஏதாவது இது மாதிரி பித்துக்குளி தனமா எழுதிகிட்டு இருப்பீங்களா?
July 7, 2012 7:31 AM



நம்பி said...
//Arasan said...நீங்கள் ஏன் இதை இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்தக் கல்லின் சக்திதான். அந்தப் பூசாரியை மாட்டிவிட்டதோ என்னவோ?//

பேஷ பேஷ...

அப்ப இனிமேல் உங்கள் வீட்டில் திருடன் திருடினா நாம் செய்த பாவத்துக்காக கடவுளின் சக்தி தான் நம் வீட்டில் திருடவைத்தது என்று எடுத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது?

ஒரு கற்பழிப்பு உங்கள் வீட்டிலோ, உறவினருக்கோ நடந்தால் நாம் செய்த பாவம், அதற்கு தான் கடவுளின் சக்தி நமக்கு தண்டனை கொடுத்தது என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது?

அதற்காக புகார் எதுவும் கொடுக்காமல் ஏன்? நம்மை கடவுள் தண்டித்துள்ளார் என்று அமைதிக் காக்க கூடாது.

இப்படயே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றித்திற்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உங்களிடம் சண்டை போட்டால் கூட இது கடவுளின் செயல்..என்று எடுத்துக் கொள்ள கூடாது.

இப்படி உங்களுக்கு எதிராக எழுதுவது கூட கடவுளின் செயலாக நீங்கள் ஏன்? எடுத்துக் கொள்ளக் கூடாது?

நீங்கள் வாகனத்தில் செல்லும் போது யாராவது உங்கள் வாகனத்தை தாறு மாறாக ஒட்டி வந்து இடித்தாலும்...இல்லை இல்லை இது நாம் எப்போதோ செய்த பாவம் அதனால் தான் கடவுள் தன் சக்தி மூலம் இன்னொரு வாகனத்தை கொண்டு வந்து இடிக்கிறார் என்று விபத்து நடந்தாலும் நொண்டிக் கொண்டே..மருத்துவமனையில் நீங்களே போய் சேர்ந்து கொண்டு, போலீசிடமும் இது கடவுளின் செயல் என்று புகார் கொடுக்காமல் அமைதியாக இருக்கக் கூடாது.

ஏனென்றால் கல்லின் சக்தி தவறு நடப்பதற்கு முன் தான் தடுக்காதே...!

கல்லின் சக்தி தான் உலகில் நடக்கும் அத்தனையும் செய்வதாக நினைக்கும் போது இப்படி எல்லாவற்றையும் நினைக்கலாமே!

ஏன்? குய்யோ முறையோ என்று கத்த வேண்டும்? ஏன்? திருடன்..திருடன் என்று கத்தவேண்டும்?

July 7, 2012 7:42 AM


நம்பி said...
Arasan said...//கடவுளுக்கு எதுக்குங்க பேரு. கடவுள் அவ்வளவுதான் எனக்குத் தெரியும். வேற எல்லாம் உங்களமாதிர ஆளுங்களுக்குத்தானே அதிகம் தெரியும்.//

அப்படியா? கடவுளின் பேரைப் பத்தி கவலைப்படாத ஆளா? கீழே உள்ளதை எழுதியது...????

Arasan said...

//
கோயில் அறங்காவலர்கள் எல்லாம் திராவிட சிந்தனையுள்ளவர்களா இருப்பின் கொள்ளை நடக்கத்தானே செய்யும்....''//

கோயில் அறங்காவலர்களை பற்றி எதுக்கு கவலைப் படணும்? அது இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? கடவுள் என்பது ஒருவரே இதெல்லாம் தேவையில்லை என்று தானே கூறியிருக்கணும்?

உமது கொள்கையிலேயே தெளிவு இல்லையே....???

மற்றவர்களுக்காகத் தான் ஏதோ நடிப்பது மாதிரி.....???????
July 7, 2012 7:47 AM


நம்பி said...
Arasan said...//உங்க தலைவர்கள் பாதிப்பேரு இரண்டு பொண்டாட்டி, மூணு பொண்டாட்டி, இப்படி சைட்ல வச்சுக்க வேண்டிய அவசியமே இல்ல.//


கடவுளின் அப்பாவுக்கே அறுபதினாயிரம் பொண்டாட்டியாமே!

எதுக்கு அவ்வளவு பொண்டாட்டி?

ஒரு நாளைக்கு ஒரு பொண்டாட்டின்னு இருக்குமோ? அதை தெளிவா குறிப்பிட மாட்டேங்கிறானுங்க...

ஆனா? அவர் இங்கே தான் பொறந்தாருன்னு இன்னொரு கடவுளோட கோயிலை இடிக்கறானுங்க...

எப்படி பாரு! கடவுள் இருக்குன்னு சொல்றவன்தான் இன்னொரு கடவுளோட கோயிலை இடிக்கிறான்..பாதிரியாரை கொளுத்தறான்...

பெண் இன்னொரு ஆடவனோடு பேசினாலே கற்பற்றவள் என்று கூறுகிறான்...

தன் மனைவி மேல சந்தேகப்பட்டு அவள் சோரம் போகாதவளா? என ஊருக்கு காட்டவேண்டும் என்று தீயில் இறக்குகிறான்...

ஆனால் ஒரு பெண்ணை 5 பேருக்கு மனைவியாக ஆக்கி பதிவிரதை என்கிறான்...

ஒரு பெண் 5 பேருக்கு மனைவினாலும், உங்களால் புதிய கலாச்சாரத்தை உண்டு பண்ணினாலும்..அதை தான் புனித நூலாக ஆக்கினாலும் அதை நீங்கள் பின் பற்ற மாட்டேன் என்கிறீர்கள்..பெண்ண உடன் கட்டை ஏற செல்கிறீர்...அவள் கற்பை சோதிக்கிறேன்..என்று அவளை கொடுமைப் படுத்துகிறீர் என்னய்யா கடவுள் புராணம் ஒன்று கூட உருப்படியாய் இல்லையே!!!

கடவுளின் பக்தை மகளாகத் தானே ஆக வேண்டும் அவளையே கடவுள் கல்யாணம் செய்வதாக எழுதி வைத்திருக்கிறீர்களே இதெல்லாம் கடவுள் ஒழுக்கத்தை போதிப்பதாக தெரியவில்லையே???

அதனால் தானய்யா உங்கள் கோயிலில் மணியாட்டுகிறான்....வேட்டியை தூக்கிவிட்டு....

July 7, 2012 7:57 AM


நம்பி said...
Arasan said... கடவுள் அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.//

அப்படியா?

அப்புறம் ஏன்? இந்த பதில்...

Arasan said...//
நீங்கள் ஏன் இதை இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்தக் கல்லின் சக்திதான். அந்தப் பூசாரியை மாட்டிவிட்டதோ என்னவோ?//

அது கடவுள் இல்லை.. அது கல் என்று தானே சொல்லியிருக்க வேண்டும்...

கல்லின் சக்தி....அது இது எல்லாம் எப்படி? வரும்?

கடவுள் அவ்வளவு தான் தெரியும் என்று பதில் வைத்துவிட்டு கல்லின் சக்தி..என்று எப்படி கண்டுபிடிக்கப்பட்டது...?

கல்லின் சக்தி தான் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணம் என்று சும்மா இருக்கலாமே!

மனித நடவடிக்கை அனைத்திற்கும் கல்லின் சக்தி தான் என்று ஏன்? எடுத்துக் கொள்ள முடியவில்லை...

அப்புறம் இப்படி இதெல்லாம் வருகிறது...

Arasan said...///
கோயில் அறங்காவலர்கள் எல்லாம் திராவிட சிந்தனையுள்ளவர்களா இருப்பின் கொள்ளை நடக்கத்தானே செய்யும்....''//

மேலே உள்ள இதுவும் கடவுளின் சக்தி என ஏன்? எடுத்துக் கொள்ள முடியவில்லை?

நீயே கடவுள் இது தான் என்று வரையறுக்கிறாய்! அதை நீயே மறுக்கிறாயே! ஏன்?

ஏதாவது ஒன்றை சொல்! கடவுள் கற்பனைக்கு நீயே அனைத்து வியாக்கானமும் சொல்கிறாய் அதில் ஒன்றைக் கூட நீ ஏற்றுக் கொள்ளவில்லையே!

நீயே மீறுகிறாயே! எப்படி?

July 7, 2012 9:46 AM


நம்பி said...
Arasan said...//ஏங்க, கல்லுக்குள்ளையும் "ஹிக்ஸ் போஸான்" இருக்குதுங்க. அதுதானே அறிவியல். நாங்க கோயிலெல்லாம் இடிக்க வேண்டிய அவசியம் இல்லைனு நான் நினைக்கிறேன். நீங்க!//
அப்புறம் ஏன்? பாபர் மசூதியை இடிச்சீங்க! ஏனென்றால் ''நாங்கள்'' என்று தனி இனத்தையே கடவுள் உருவாக்கியதாக சொல்லிவிட்டபோது இப்படித்தானே கேட்க வேண்டும்.

இடிச்சவங்க எல்லாம் கடவுள் கொள்கை உடையவர்கள் தானே! கடவுள் சக்தியை நம்புபவர்கள் தானே!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளரை கொன்றவரும் கடவுள் கொள்கை உடையவர் தானே! அதான் ஊத்தை சங்கராச்சாரியார் தானே!

காஞ்சிபுரம் ஊத்தை தேவநாதனும் கடவுள் கொள்கை உடையவர் தானே!

இருக்கின்ற அத்தனை சாமியார்களும் கடவுள் கொள்கை உடையவர் தானே! அவர்கள் ஏன்? போலி சாமியாராக கூறவேண்டும்?
உடனே இதை எல்லாம் கடவுள் கண்டுபிடிக்க உதவினார் என்று சொல்லப்படாது!
இதை கண்டுபிடித்தவன் எல்லாம், சாமியார் பித்தலாட்டங்களை கண்டுபிடித்தவன் எல்லாம் கடவுள் கொள்கை இல்லாதவன் தான்.

உடனே மேலே சொன்னது போல் அந்த நாத்திகவாதியால் இதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுள் சக்தி உதவியது என்று ஏன்? சொல்லக் கூடாது... என்று கேட்கப்படாது...

அப்படி என்றால் இந்த நாட்டில் நாத்திகனும் தேவை என்றாகி விடுகிறது..அப்புறம் ஏன்? நீர் நாத்திகத்தை எதிர்க்கவேண்டும்? இதுவும் கடவுள் சக்தி என்று ஏன்? எடுத்துக் கொள்ளமுடியவில்லை?

எந்த? ஆத்திகனாவது இதுவரை ஒரு போலி சாமியாரை, அவன் பண்ணுகிற லீலையை கண்டுபிடித்து இருக்கிறானா?

கண்டுபிடித்தவுடன் இது தான் கடவுள் செயல் என்று சொல்வது மட்டும் ஏன்?

நீ அதே மாதிரி உனக்கு நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் ஏன்? இது ''கடவுள் சக்தி'' என்று ஏன்? எடுத்துக் கொள்ள மறுக்கிறாய்?

ஏன்? புகார் கொடுக்க காவல் நிலையம் போகிறாய்? ஏன்? உருண்டு பெரண்டு அழுகிறாய். ஏன்? எல்லாம் ''கடவுள் சக்தி'' என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!

வேலை கிடைக்கவில்லை ''கடவுள் சக்தி''...உன்னை ஒருவன் அடிக்கிறான் ''கடவுள் சக்தி''...உன்னை திட்டுகிறான் ''கடவுள் சக்தி''...இப்படியே உட்டுக்கிணுப் போக வேண்டியது..தானே..

உன்னை திட்டுபவனும் கடவுள் சக்தியை நம்புவன் தானே! ஏன்? அவனிடம் திருப்பி சண்டை போடுகிறாய்?

உன்னை கடவுள் சக்தி ஏதாவது செய்ய தூண்டும் போது அவனையும் கடவுள் சக்தி ஏதாவது செய்ய தூண்டத்தானே செய்யும்!

இதுக்காக புகார் செய்யலாமா?

Arasan Said.
சாரி தலைவா! உங்கள ரொம்ப லேசா நினைச்சுட்டேன். "இப்ப நீங்க திட்டுறீங்களே" அதை "கடவுள் செயல் என்றே நினைத்துக் கொள்கிறேன்". உங்க மனச நோகடிச்சிருந்தா மன்னிச்சுக்கணும். அதுக்காக இவ்வளவு பெரிய மறுமொழியா? இதற்கு மறுமொழியிட எனக்கு மனம் வரவில்லை. இருப்பினும், என் மறுமொழிகளுக்கெல்லாம் மறுமொழியிட்டதற்கு நன்றி.