"முதலாளித்துவ"த்தினால் ஏற்படும் அவலங்கள் என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வார்களே அதே அவலங்கள் கம்யூனிசப் பொன்னுலகம் என்று கூறப்படும் சீனாவிலும் அரங்கேறி வருகின்றன.
உலக உற்பத்தியில், போலித் தயாரிப்புகளில் நம்பர் ஒன் நாடு சீனாதான், மனித உரிமை மீறலில் நம்பர் ஒன் நாடு சீனாதான், லாபம் ஈட்டும் தொழில்கள் என்ன என்ன உண்டோ அனைத்திலும் சீனாதான் நம்பர் ஒன். பொன்னுலகில் சுரண்டலே இருக்காது என்கிறார்கள். வங்கிகள் லாபம் ஈட்டுவதில் சீனாதான நம்பர் ஒன். லாபம் என்பது சுரண்டலில்லையா? கேட்டால் பாட்டாளிகளின் அரசு முதலாளிகளைத் தானேச் சுரண்டுகிறது என்பார்கள். சீன முதலாளிகளும் மக்கள் சீனத்தின் அங்கம்தானே. மக்கள் சீனம் தன் மக்களையும் சுரண்டுகிறது. உலகத்தையும் சுரண்டுகிறது. பொதுவுடைமை அரசு என்றுக் கூறிக்கொண்டு அதிபயங்கர முதலாளித்துவ நாடாகத்தான் மக்கள் சீனம் இருக்கிறது. முதலாளித்துவத்தின் பயங்கரம், நிலவுடைமை அரசுகளின் பயங்கரம், இராணுவ ஆட்சியின் பயங்கரம் என அனைத்துப் பயங்கரங்களின் மொத்தக் கலைவையாக அல்லவா மக்கள் சீன அரசு இருக்கிறது.
கிழே இருக்கும் செய்திகளைப் பாருங்கள்
போலி உற்பத்திகளின் தாயகம் சீனா: 'அப்பிள் ஸ்டோர்ஸ்' ஐயும் விட்டுவைக்கவில்லை போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது சீனா. மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை அனைத்தினையும் விட்டு வைக்கவில்லை. போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி கடைகளும் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதற்கு முதன் முதலாக இலக்காகியுள்ளது 'அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்'. அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ- பேட் ஆகியவை சீனாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. சீனாவின் போலி உற்பத்தியாளர்கள் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் . பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ் மற்றும் அனுமதியற்ற விநியோகஸ்தர்கள் அங்கு நிறைந்து வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளில் பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர். இத்தகைய போலி ஸ்ட்ரோர்ஸ்கள் சீனாவில் மட்டுமன்றி வெனிசூலா மற்றும் ஸ்பெய்ன் உட்பட பல நாடுகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சீனாவில் அப்பிளின் உத்தியோகபூர்வ ஸ்ட்ரோர்கள் 4 மட்டுமே அமைந்துள்ளன. இவற்றில் 2 பீஜிங்கிலும் மற்றைய இரண்டும் சங்காயிலுமே அமைந்துள்ளன. மேலும் சிலர் அப்பிளின் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் ஆவர். போலி உற்பத்திகள் அப்பிளின் வர்த்தக நாமத்திற்கும், தரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அப்பிள் தற்போது கவலை வெளியிட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்வரூபமாக நடைபெறும் போலி வியாபாரத்தினை நீங்களும் பாருங்கள். நன்றி: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32916 சீனாவில் ஏழு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்தப் பெண்ணொருவருக்கு கட்டாயமாக கருக்கலைப்பு செய்யபட்ட விவகாரம் தொடர்பில் இணையத்தில் பெரும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்த சூழ்நிலையில், சீன அதிகாரிகள் அவசர அவசரமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த கருக்கலைப்புடன் தொடர்புபட்டிருந்த ஷான்ச்சி மாகாண அதிகாரிகள் மூன்று பேர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது குழந்தை உண்டானால் செலுத்த வேண்டிய அபராதத்தை செலுத்தும் வசதி இல்லாத காரணத்தால் அதிகாரிகளால் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்ட ஃபெங் ஜியான்மெய் என்ற அப்பெண்மணியிடம் சீன அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். சீனாவில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கடுமையான சட்டத்தின் காரணமாக கட்டாய கருக்கலைப்பு நடந்துவரவே செய்வதாக அவ்வப்போது செய்திகள் அடிபட்டு வரத்தான் செய்துள்ளன. ஆனால் தற்போது இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக பேசப்படுவதற்குக் காரணம் ஃபெங் ஜியான்மெய்யின் வயிற்றிலிருந்து கலைக்கப்பட்ட ஏழு மாதக் கருவின் தத்ரூபமான படங்கள் இணையத்தில் சகட்டு மேனிக்கு பரவியதுதான். படம் காட்டுத் தீயாகப் பரவ திக்குமுக்காடிப்போன சீன அதிகாரிகள் வேறு வழியில்லாமல் பின்வாங்க வேண்டி வந்துள்ளது. இந்த விவகாரத்தால் மக்களிடையே எழுந்த உணர்வலைகளுக்கு வடிகால் வழங்கும் விதமாக டியான்யா என்ற இணைய கருத்துப் பரிமாற்ற இணையதளம், வலுக்கட்டாய கருக்கலைப்புக்கு ஆளானவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள் என அழைப்பு விடுத்திருந்தது. இந்த கருத்து பரிமாற்ற இணைய மன்றத்தில் ஏற்கனவே ஏராளமானோரின் கசப்பான அனுபவங்களும், உடல் ரீதியான உளரீதியான பாதிப்பின் வர்ணனைகளும், அதிகாரிகளின் பழிவாங்கல் பற்றிய கதைகளும் நிறைந்து கிடக்கின்றன. இணையத்தில் அழுத்தம் தருவதன் வழியாக அதிகாரிகளை செயல்பட வைக்கலாம் என்ற தங்களது புதிய சக்தியை சீன இணையப்பாவனையாளர்கள் கடந்த ஜூலையில் உணர்ந்திருந்தனர். அப்போது வெங்ஸூவில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்து நடந்தது, அந்நாட்டின் ரயில்வேயில் போதிய பாதுகாப்பு இல்லாதிருப்பது பிரச்சினைகளை அதிகாரிகள் மூடி மறைப்பது போன்றவை தொடர்பில் இணையத்தில் பெரும் விவாதம் நடக்க வழிவகுத்திருந்தது. ஆனால் சீனாவில் இணையத்திலும்கூட பல கட்டுப்பாடுகள் இருப்பதால், அதிலும் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். நன்றி: http://www.bbc.co.uk/tamil/global/2012/06/120615_chinaabortion.shtml ரயிலில் கவர்ச்சி உடை அணியும் பெண்கள்: சீனாவில் சர்ச்சை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஜூன், 2012 - 11:33 ஜிஎம்டி சீனாவின் ஷாங்காய் மாநகரின் பாதாள ரயில் நிர்வாகம், பெண் பயணிகள் பார்ப்போரைக் கவருமாறு உடைகளை உடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து, சீனாவில் இணைய தளங்களில் இது குறித்து ஒரு சூடான விவாதம் நடந்து வருகிறது. ஷாங்காய் மெட்ரோ வெளியிட்ட ஒரு விளம்பர அறிவிப்பில், பெண் ஒருத்தி, உடலின் பாகங்கள் சற்றுத் தெரியும் வண்ணம் உடுத்தியிருக்கும் படத்தின் கீழ், இது போல உடைகளை அணிவது, மன வக்கிரம் கொண்டவர்களைத் தான் ஈர்க்கும் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது பொது இடங்களில் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் பிரச்சினைக்கு, பெண்கள் மீதே பழி போடும் செயல் என்று ஆயிரக்கணக்கான பெண் பயணிகள் கூறுகிறார்கள். நன்றி: http://www.bbc.co.uk/tamil/global/2012/06/120626_china.shtml பேங்கர் பத்திரிகை(Banker Magazine) வெளியிட்டுள்ள தனது வருடாந்திர ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சீன வங்கிகளே உலகளவில் வங்கிகள் ஈட்டும் லாபங்களில் 29 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த பத்திரிகையின் ஆய்வுகள் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீன வங்கிகளின் லாபம் உலகளவில் நான்கு சதவீத அளவுக்கே இருந்தன. கடந்த ஆண்டில் ஐரோப்பிய வங்கிகள் ஈட்டிய லாபத்தின் பங்கு உலகளவிலான லாபத்தில் ஆறு சதவீதமாகவே இருந்தன. ஐரோப்பாவின் நட்டம் சீனாவின் லாபமாக அமைந்தது என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ப்ரையன் காப்லென் கூறுகிறார். அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியிலில், மிகக் குறைவான லாபங்களை ஈட்டும் 25 வங்கிகளில் பட்டியலில் 24 வங்கிகள் ஐரோப்பாவில் உள்ளன. சீனத் தொழில் வங்கியே உலகளவிலான லாபப் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. நன்றி: http://www.bbc.co.uk/tamil/global/2012/07/120702_chinabanks.shtml |