உரிமைக்குரல் இதழ் | மின்பதிப்பாகிறது
2012
ஆகஸ்ட் மாத உரிமைக்குரல் இதழ் அவர்களது வலைப்பூவில் வெளிவந்திருக்கிறது. அசோக்
லேலண்ட் இடதுசாரி தொழிலாளர்களால் நடத்தப்படுவதுதான் இந்த இதழ். இந்த இதழை நான்
தட்டச்சு செய்து கொடுக்கிறேன். பத்திரிகையின் முழு பொருளும் இணையத்திலும் வெளிவர
வேண்டும் என்ற ஆவலில் அதன் ஆசிரியர்களும் நானும் முயற்சி எடுத்து ஒரு வலைப்பூவை
உருவாக்கினோம். அந்த வலைப்பூவில் இன்று ஆகஸ்ட் மாத இதழை முழுவதுமாக யூனிகோட் எழுத்துருவில்
ஏற்றியிருக்கிறோம். மின் பதிப்பாக தரவிறக்கம் செய்யவும் லிங்க்
கொடுத்திருக்கிறோம்.
இந்த
இதழில் தொழிலாளிகளின் படைப்பாற்றலைக் காணலாம். கதை, கவிதை, கட்டுரை, வெளியுலக
செய்திகள் என்று ஒரு ஜனரஞ்சக பத்திரிகையாக உரிமைக்குரல் திகழ்கிறது.
எனக்கு ஓரளவு அரசியல் சொல்லிக் கொடுத்ததே இடதுசாரிகள்தான் (அதுவும் மார்க்சிஸ்டுகள்). நான் இடதுசாரியல்ல என்றாலும், அவர்களது சில கருத்துகள் பிடிக்கும்.
கீழுள்ள லிங்குகள் அவ்விதழில் உள்ள தலைப்புகளே. நீங்கள் விரும்பிய தலைப்புகளைச் சொடுக்கி படித்துப் பயன்பெறுங்கள்.