27 Sept 2012

மருந்தில்லா மருத்துவம்

அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார்  என்பார்கள். தற்போது நவீன மருத்துவ உலகில் இலட்சங்களைச் செலவு செய்துவிட்டு குழந்தைக்காக ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கு இந்த முதுமொழியில் தீர்வு இருக்கிறது என்பதே உண்மை. இதை நான் சொல்லவில்லை. சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் கோவில்கள் மற்றும் பொது வழிபாட்டு இடங்களில் அரச மரம் இருக்கும். சில இடங்களில் அரச மரத்துடன் வேப்ப மரங்களும் இருக்கும்.
இதுபோன்ற சிறப்பான இடங்களில் ஒரு உயிரியல் மின்சக்தி எப்போதும் குடிகொண்டிருக்கும். அதோடு இந்த மரங்களில் இருந்து வெளியாகும் பிராணவாயுவுடன் ஓசோன் (Ozone) கலந்து வெளியாகும். மேலும் அரச மரத்தில் 24 மணி நேரமும் பிராண வாயு வெளியாகும். அதிலும்....

அதிகாலை நேரம் 3 மணியில் இருந்து 6 மணி வரை 100% சுத்தமான பிராணவாயு கிடைக்கும். இந்த மூன்று மணி நேரத்தில் 30 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் வரை சுற்றி வரும்போதும், தியானம் செய்யும் போதும், அல்லது யோகாசனம் செய்யும் போதும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகள் தூண்டப் படுகின்றன. இதனால் இரத்தமும் சுத்தமடைகிறது. பெண்களின் சூல் உறுப்புகள் தூண்டப்பட்டு; கர்ப்பத்தை உருவாக்கும் சுரப்பிகள் சரியான முறையில், நீர்களைச் சுரக்கின்றன. மேலும் கர்ப்பப்பையில் உள்ள குறைபாடுகளும் நீங்கி விடுகின்றன. அதே போல ஆண்களுக்கும், உயிரணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவு சேர்ந்து ஆண் மலடு குறைகள் நீங்கி விடுகின்றன. இதனால் தம்பதிகளுக்குக் குழந்தைப் பேறு உருவாகிறது. இவை எல்லாம் அனுபவ உண்மை.

இன்றைய விஞ்ஞான ஆய்வு முறைகளின்படி, ஒரு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு 2400 கிலோ பிராண வாயுவை வெளிவிடுகிறது. ஒரு நாட்டு மக்களுக்கு அரசன் எப்படி நன்மையைச் செய்வானோ, அது போல் நாட்டு மக்களுக்கு நன்மையைச் செய்யும் அரசன்தான் ``அரசமரம்''

B.டில்லி
சித்த வைத்தியர்
8122309822


நன்றி: உழைப்போர் உரிமைக்குரல்