9 Dec 2012

கசாபும் மனுஷ்யபுத்திரனும்நக்கீரன் இதழில் திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள் எதிர்க்குரல் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார். 28.11.2012 தேதியிட்ட இதழில்  "கொலையைக் கொண்டாடும் தேசம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைப் படித்தபோது மேதாவிகள் இப்படியெல்லாம் கூட நினைக்கிறார்களே என்று எண்ணத் தோன்றியது.

166 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றவனுக்கு தூக்கு கொடுத்திருக்கக்கூடாதென்றும் ஆயுள் தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதுவரை அவனை வைத்திருந்ததற்கே கோடி கோடியாகப் பணம் செலவழிந்திருக்கும் வேளையில் ஆயுள் தண்டனை கொடுத்திருந்தால் எத்தனை கோடிகள் செலவாகும்.


கசாபை தூக்கிலிட்டதை வரவேற்று கருத்து வெளியிட்டிருந்த அன்னா ஹசாரே, இந்திப் பட இயக்குனர் ராம் கோபால் வர்மா, அஜ்மலை அடையாளம் காட்டிய 13 வயது சிறுமி தேவிகா ஆகியோரைக் குறை கூறுகிறார் மனுஷ்யபுத்திரன்.

மோடியும் பாஜகவினரும் அடுத்து அப்சல்குருவின் இரத்தைக் கேட்கின்றனரே என்று வருத்தப்படுகிறார். அப்சல் குரு என்ன விடுதலைப் போராட்டத் தியாகியா? நாடாளுமன்றத்திற்கு குண்டு வைத்தவனைக் கொல்லாமல் ஏன் விட்டுவைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் குற்றமா?
நான் குற்றவாளியை மன்னிக்கச் சொல்லவில்லையே! மரணதண்டனைக் கூடாதென்றுதானே கேட்கிறேன் என்று சிறுபிள்ளைபோல் அடம்பிடிக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

நாளை ஆப்கனில் இருந்து ஒருவன் டெல்லியிலோ மற்ற இடங்களிலிருந்தோ செல்லும் விமானத்தைக் கடத்தி அஜ்மலையும், அப்சலையும் விடுதலை செய்தால் பணயக் கைதிகளை விடுவிப்பேன் என்று மிரட்டல் விட ஏதுவாக இருக்கும் இவர் கேட்கும் ஆயுள் தண்டனை.

பிடித்த போதே கொன்றிருக்க வேண்டும். சில பல காரணங்களுக்காக அரசு அதைச் செய்திருக்காது.

இதே மனுஷ்ய புத்திரன் பால்தாக்கரே இறந்தபோது முகநூலில் கருத்து வெளியிட்ட ஒரு பெண்ணின் கருத்து சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குவதாக காட்டிக் கொண்டு பால்தாக்கரேவை எவ்வளவு முடியுமா அவ்வளவு வசைபாடினார். அதுவும் அவர் இறந்த அடுத்த இரண்டு தினங்களுக்குள். அதில் கருத்து சுதந்திரத்திற்கு வக்காலத்து வாங்கியது நியாயமாக இருந்தாலும், கட்டுரையின் நோக்கம் பால்தாக்கரேயை வசைபாடுவதற்காகத்தானே இருந்தது. இறந்தவன் கொடியவனாகவே இருந்தாலும் மரியாதை நிமித்தமாக அவனது நல்ல செயல்களையே நினைவு கூர்வார்கள். மனுஷ்யபுத்திரன் போன்றோர், பால்தாக்கரேயிடம் ஒரு நல்லகுணம் கூட இல்லை என்று அடித்துப் பேசுகின்றனர். ஆனால், அப்சல் குரு, அஜ்மல் கசாபிடம் இருக்கும் நல்ல குணங்கள் அத்தனையும் இவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

இந்தியாவில் தூக்கு போடும் பணிக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லையாம். அதைத் தொழிலாகச் செய்யத்தான் ஆட்கள் முன் வரவில்லையே தவிர, ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த வேலையைச் செய்ய ஒவ்வொரு இந்தியனும் அவ்வளவு உற்சாகத்துடன் தயாராயிருக்கிறானே என்று உருகுகிறார். அய்யா! இந்தியன் அப்படித்தான் இருப்பான். நீங்கள் இந்தியரல்லவோ?

எனது குழந்தைகள், யாரோ ஒருவனை ஏன் தூக்கில் போடாமல் இருக்கிறார்கள்? என்று கேட்டுவிடுவார்களோ என அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான் என்கிறார். இப்படிப்பட்ட கொடுஞ்செயலுக்கு உங்கள் பிள்ளைகள் இந்தியர்களாக இருந்தால் அப்படித்தான் கேட்பார்கள். ஆனால்...

உங்கள் பசுத்தோலின் பெயர்தானே மனுஷ்யபுத்திரன், ஆனால் புலியின் பெயர் எஸ். அப்துல் ஹமீது ஆயிற்றே. நீங்கள் இன்னும் மனுஷ்யபுத்திரனாக மாறவில்லை அய்யா. 

(இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பசுத்தோல் போர்த்தியிருக்கும் புலிகளைப் பற்றி மட்டுமே இப்படி குறிப்பிடுகிறேன்.)