13 Aug 2013

சோ - சின்னக்குத்தூசி - பெரியார் - தேசபக்தி?



துக்ளக்ஆசிரியர் சோ கூறினார்.

…. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நீடித்தது. இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும்விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும்விட்டுவிட்டுப் போகாதீர்கள்! என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது.
(குமுதம்: 03-02-2000)


உடனே இதற்கு தி.க.வின் சின்னக்குத்தூசி பதில் சொன்னார்:-

வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப்போராட்டம் நடத்தப்பட்டபோது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.

 சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும்.
(குமுதம்-03-02-2000)

இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

ஆதாரம் இதோ!

27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் விடுதலைவெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை  தமிழக தெய்வம் பெரியாரே ஒத்துக்கொள்கிறார்.


அவர் கூறுகிறார்:-

நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
(தமிழர் தலைவர் பக். 14)

நன்றி: விஜயபாரதம் முகநூல் பக்கம்


இன்றும் இதே நிலையே நீடிக்கிறது…..

 ஆதிக்க சாதிகள் பல இருக்க, இன்னும் செத்த பாம்பை அடித்த கதையாக, இதைப்போன்ற ஆதிக்க சாதியினர், தி.க., கம்யூனிசம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு கற்பனை எதிரியான பார்ப்பானைக் காட்டிவிட்டு, தங்கள் சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றனர். கூடவே இந்தியா என்றால் எதிரி என்ற பார்வையையும், இவர்கள் மட்டுமே தமிழகத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்ற ஒரு போலி முகத்திரையையும் காட்டுகின்றனர்.

இவர்களிடம் இருந்து பிழைக்குமா தமிழகம்?

மேற்கண்ட விஷயங்களில் சோ ராமசாமி அவர்களை நம்பும் அளவுக்கு, தமிழக அரசியலில் அவரை நம்ப முடியுமா?

மஹாபாரதம் படிச்சிருக்கீங்களா? இல்லையா அப்ப படிங்க, அரசியல இன்னும் அதிகமா புரிஞ்சிக்கலாம்.