எனது நண்பர் ஒருவர் அச்சக முகவராக
இருக்கிறார். நான் ஒரு டிடிபி ஆப்பரேட்டர். அவருக்கு பல பள்ளிகளில் இருந்து
ஆர்டர்கள் வரும். அந்த வேலைகளை எல்லாம் நான் டிடிபி செய்து கொடுப்பேன்.
ஒரு நாள் அவர் ஒரு ரசீதை என்னிடம்
காண்பித்தார். அது அவருக்குப் போட்டியாக அவர் ஆர்டர் எடுக்கும் பள்ளிக்கு ஒரு
அச்சகம் கொடுத்திருந்த கொட்டேஷன். அதை பள்ளி நிர்வாகம் அவருக்குக்
கொடுத்திருக்கிறது. ''அந்த கொட்டேஷனுக்கு போட்டியாக விலை நிர்ணயம் செய்து என்
லெட்டர்பேடில் ஒரு டிடிபி எடுக்க வேண்டும்'' என்று கொடுத்தார்.
அந்த ரசீதின் இடது ஓரத்தில் ஒரு பிள்ளையார்
படம். அந்த பிள்ளையார் படம் பேனாவால் (அது என்ன படம் என்றே தெரியாத அளவுக்கு)
நன்றாக கிறுக்கப்பட்டிருந்தது. நான் "என்ன இது'' என்று அந்த நண்பரிடம்
காண்பித்துக் கேட்டேன்.
அதற்கு அந்த நண்பர் "அந்த பள்ளி ஒரு
கிறிஸ்தவ பள்ளி, இந்துக் கடவுள் படங்களை அவர்கள் வெறுப்பார்கள். அதன் அடையாளம்
தான் இது. அவ்வளவு சகிப்புத்தன்மை அவர்களுக்கு'' என்றார்.