Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts
7 Jun 2020
9 May 2013
இது தீவிரவாத செயல் இல்லையா?
ஒரு கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கை எனக்குக் கிடைத்தது. வரிக்கு வரி அதைப் படித்துப் பாருங்கள். கீழ்கண்ட இந்தத் துண்டறிக்கை தனிச்சுற்றுக்கு மட்டுமே (கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே) அளிக்கப்படுவதாகும். இவர்களின் நோக்கம் தான் என்ன? இவர்கள் இந்த தேசத்தை இரட்சிக்கப் போகிறார்களா??? அல்லது????????????????????? நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். (குறிப்பாக இடது புறத்திலுள்ள 4, 5, 6 பேராக்களைப் படிக்கவும்)
11 Jan 2013
பாகிஸ்தானும் அக்பருதீன் ஒவைசியும்
ஒரு நாட்டின் எல்லையை ஊடுருவுவதே மிகப் பெரியத் தவறு. அப்படி
ஊடுருவி போர் புரிகையில், எதிரி நாட்டு ராணுவத்தினரின் சடலத்தில் இருந்து தலையை
வெட்டிக் கொண்டுப் போதல் என்பது தீவிரவாதிகள் பாணியாக இருக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகத்தை இது உலகத்துக்கு காட்டுகிறது.
பாகிஸ்தான் ராணுவமே தீவிரவாத ராணுவமாக செயல்படுகிறது. ஒரு
ஜனநாயக நாட்டின் ராணுவம் இப்படி நடந்து கொள்வது கீழ்த்தரமானது.
15 Oct 2012
மஹாளய அமாவாசை
இன்று மஹாளய அமாவாசை. பித்ருக்களுக்கு தர்ப்பனம் செய்வது
இன்று மிகவும் முக்கியமானதாக பலரால் கருதப்படுகிறது. ஏன் தர்ப்பனம் செய்கிறோம்? நாம்
செய்யும் தானங்களால் அல்லது முன்னோர்களுக்குப் பிடித்தமான நமது செயல்களால் அவர்களது
ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செய்கிறோம்.
நான் காணும் பலர், பித்ருக்கள் என்று இன்று அறியப்படுபவர்களை
அவர்கள் உயிருடன் இருக்கும்போது எப்படி நடத்தினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்...
1 Jul 2012
நான் இந்துவா?
"என்னடா பேரு இது மாடசாமி, குப்புசாமினு? ஸ்டைலா ராபர்ட், ரிச்சர்ட்னு வச்சா எப்படி இருக்கும்? இந்த மாதிரி பேருலாம் வச்சிருந்தா எந்தப் பொண்ணுதாண்டா ஒன்னத் திரும்பிப் பாக்கும்'' கோபமாகக் கேட்டான் பீட்டர்.
"டே நேத்து வரைக்கும் நீயே தண்டபாணிதான். இன்னிக்கு பீட்டர்னு பேர் மாத்திட்டா ஆச்சா?" என்றான் மாடசாமி
"நாங்கதான் மதம் மாறிட்டம்ல. எங்க சர்ச்ல இந்தப் பேரு கொடுத்தாங்க, இனி என்னை ஸ்டைலா பீட்டர்னே கூப்பிடு''
"ஏன்டா இவ்வளவுநாளா தண்டபாணின்னு கூப்பிட்டுட்டு, இப்படி திடீர்னு மாத்துணா எப்படிடா கூப்பிடுறது? என்னால முடியாது''
"உனக்கு பொறாமைடா அதான் மாட்டேன்ற, வேணும்னா நீயும் மதம் மாறி பேர மாத்திக்கோ. இதுக்குப் போயி ரொம்பதா அள்ட்ற"
26 Jun 2012
தர்மன் சூது!
"பெண்கள் காலங்காலமாக காமப் பொருளாகவும் மதிப்பீட்டுப் பொருளாகவும்தான் பார்க்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு சிறந்ததோர் சாட்சி தர்மன் தன் மனைவியை வைத்து சூதாடியது. அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது... ஆனால் இந்த 21 நூற்றாண்டிலும் அப்படி ஒரு சூழல் இருக்கத்தான் செய்கிறது... அப்படி ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதே நெஞ்சை பிழிகிறது ...இதைதான் நியாயபடுத்துகிறதா இந்துத்துவம்? பெண்ணுரிமையை மீட்க இந்துத்துவத்தை வேரறுப்போம்..
- இந்துத்துவத்திற்கு எதிரான தமிழன்
இப்படி ஒரு பதிவை முகநூலில் (Facebook) கண்டேன். ஒரு இடதுசாரி தோழர் இட்டிருந்த பதிவு அது. அதற்கு நான் மறுமொழியும் கொடுத்திருந்தேன். மறுமொழி கீழே பெட்டிக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19 Jun 2012
ஆயிரம் உண்டிங்கு சாதி !
சாதியம் எங்கு தோன்றியது? வேதங்களிலா? உபநிஷத்துகளிலா? கீதையிலா? புராணங்களிலா? இதிகாசங்களிலா? எங்கு தேடினாலும் சாதி என்ற பிரிவு தெரியாமல் தொழில் அடிப்படையிலான பிரிவினைகள்தானே தெரிகின்றன. அதைச் சாதிகள் எனக் கொள்ள முடியாதே. சரி! ஒரு பேச்சுக்கு அதுதான் சாதி என்றாலும் நான்கு சாதிகள்தானே இருக்க வேண்டும் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்). ஆனால் ஆயிரக்கணக்கிலல்லவா சாதிகள் உள்ளன.
11 Jun 2012
முஸ்லிமா மாறு! பகுத்தறிவோடு வாழு! - பெரியார்
தமிழ் பேப்பர் வலைத்தளத்தில் பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’
என்ற ஒரு கட்டுரையைப் படித்தேன். நந்தன் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையைவிட அதற்கு வந்த விமர்சனங்கள் எனக்குத் திருப்திகரமாகத் தெரிந்தது. பரவாயில்லை தமிழ்நாடு கொஞ்சம் திருந்திக் கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.
வந்த விமர்சனங்களில் ரங்கன் என்ற ஒரு வாசகர் தந்த விமர்சனம் யோசிக்க வைத்தது.
8 Jun 2012
அந்நிய மதங்கள் சிறுபான்மையா?
ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுபான்மை சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீடு பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது நண்பர் சொன்னார், "என்னதான் ஒரு தலித் மதம் மாறினாலும் அவனது சமூக அந்தஸ்தோ, சமூக மரியாதையோ அல்லது எந்த விதத்திலும் அவன் உயர்ந்துவிடவில்லை. ஆகவே, அவன் மதம் மாறினாலும் அவனுக்கான ஒதுக்கீடு அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை'' என்றார்.
"இது இந்திய மதங்களுள் ஒன்றில் மாறினால் பொருந்தும் என்றால் சரிதான்." என்றேன்.
"எல்லா மதமும் வெளிநாட்டு மதம்தான். இந்து மதம் என்ன இந்திய நாட்டில் தோன்றியதா? எங்கோ இருந்து வந்த பாப்பான் சொல்லிக் கொடுத்த மதம்தானே." என்றார்.
"ஆரியர் வெளியே இருந்த வந்தனர் என்றக்கூற்று எப்போதோ வலுவிழந்து, சரித்திர ஆதரங்கள் முன்னால் மண்டியிட்டுப் போய்விட்டது. ஆனால், இன்னும் பள்ளிப்பாடங்களில் இருந்து எடுக்கத்தான் நமக்கு மனம் வரவில்லை. இந்து மதம் இந்தியாவில் தோன்றியதில்லை என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என்றேன்.
17 Mar 2012
நவீனத் தீண்டாமை - உதாரணம்
எனது நண்பர் ஒருவர் அச்சக முகவராக
இருக்கிறார். நான் ஒரு டிடிபி ஆப்பரேட்டர். அவருக்கு பல பள்ளிகளில் இருந்து
ஆர்டர்கள் வரும். அந்த வேலைகளை எல்லாம் நான் டிடிபி செய்து கொடுப்பேன்.
ஒரு நாள் அவர் ஒரு ரசீதை என்னிடம்
காண்பித்தார். அது அவருக்குப் போட்டியாக அவர் ஆர்டர் எடுக்கும் பள்ளிக்கு ஒரு
அச்சகம் கொடுத்திருந்த கொட்டேஷன். அதை பள்ளி நிர்வாகம் அவருக்குக்
கொடுத்திருக்கிறது. ''அந்த கொட்டேஷனுக்கு போட்டியாக விலை நிர்ணயம் செய்து என்
லெட்டர்பேடில் ஒரு டிடிபி எடுக்க வேண்டும்'' என்று கொடுத்தார்.
அந்த ரசீதின் இடது ஓரத்தில் ஒரு பிள்ளையார்
படம். அந்த பிள்ளையார் படம் பேனாவால் (அது என்ன படம் என்றே தெரியாத அளவுக்கு)
நன்றாக கிறுக்கப்பட்டிருந்தது. நான் "என்ன இது'' என்று அந்த நண்பரிடம்
காண்பித்துக் கேட்டேன்.
அதற்கு அந்த நண்பர் "அந்த பள்ளி ஒரு
கிறிஸ்தவ பள்ளி, இந்துக் கடவுள் படங்களை அவர்கள் வெறுப்பார்கள். அதன் அடையாளம்
தான் இது. அவ்வளவு சகிப்புத்தன்மை அவர்களுக்கு'' என்றார்.
Subscribe to:
Posts (Atom)









