11 Jun 2012

முஸ்லிமா மாறு! பகுத்தறிவோடு வாழு! - பெரியார்


தமிழ் பேப்பர் வலைத்தளத்தில் பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’
என்ற ஒரு கட்டுரையைப் படித்தேன். நந்தன் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையைவிட அதற்கு வந்த விமர்சனங்கள் எனக்குத் திருப்திகரமாகத் தெரிந்தது. பரவாயில்லை தமிழ்நாடு கொஞ்சம் திருந்திக் கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.

வந்த விமர்சனங்களில் ரங்கன் என்ற ஒரு வாசகர் தந்த விமர்சனம் யோசிக்க வைத்தது.


·  RANGAN
#24
//அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களைசாமி, சாமி, புத்திஎன்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’//
உண்மைதான்மதம் மாறிய பின் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வயற்றில் வெடி குண்டைக் கட்டிக்கொண்டு தன்னையும் பிறரையும் சாக அடிப்பதுதான். என்ன கொடுமை அய்யா இது ! இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள கொலைகார பயங்கரத்துக்கு யார் எந்த மதம் காரணம் என்று தெரிந்தும் இப்படி எழுதுவது சகிக்க முடியவில்லை. சரி இங்குதான் தீண்டாமை நோய் ஹிந்து மதத்தால் வந்தது. ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்து மதமா உள்ளது. தினம் கொலை நடக்கின்றது அங்கெல்லாம். யார் வேண்டுமானாலும் தாராளமாக இஸ்லாத்துக்கு செல்லுங்கள்உங்களை யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் அங்கு உங்கள் சொந்த கருத்து என்று எதுவும் கிடையாது.

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரையும், விமர்சனமும்.