30 Jun 2012

மறுவாசிப்பாம் "நோன்பு''

'சே என்னடா இது நாம எப்ப பிளாக் எழுதுனாலும், கம்யூனிசம், அந்நிய மதம் இதப் பத்திதானே எழுதிட்டிருக்கோம். நாம ஏதோ தப்பு செய்றோமோ' என்று நான் சிந்தித்ததுண்டு. ஆனால் நான் அப்படிச் சிந்தித்தது தவறு என்பதை மெய்ப்பிக்க தினம் ஒரு செய்தி இந்திய கலாச்சாரத்தைக் கெடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பற்றியும், அந்நிய மதத்தினரைப் பற்றியும் வந்து கொண்டுதான் இருக்கிறது. கீழே உள்ள சுட்டியில் உள்ள கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

ஆண்டாள் மீது வக்கிர அவதூறு | தமிழ்ஹிந்து


நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கெடுக்க 'அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவும்' செய்றாங்க. ஆசிரியரைப் பாத்தீங்களா "டி.செல்வராஜ் என்கிற இடதுசாரிக்காரர்'. அதைப் பரிந்துரை செய்தது யார் தெரியுமா "மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் பியூலா குமாரி' எப்படிப் போகிறது பாருங்கள் கதை.

கடவுள், ஆன்மிகக் கதைகள் பேசாதீங்கன்னு சொல்லிட்டிருந்த இடதுசாரிகள் மெல்ல சிறுதெய்வ வழிபாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பிக்கிறாங்களே, என்னடான்னு பார்த்தா
ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் எடுக்கப்பட்ட "தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு' வகுப்புல கலந்துக்கிட்ட இடதுசாரிகள், இந்து மதம் அந்நியம். சிறு தெய்ங்கள்தான் மண்ணின் தெய்வங்கள் என்று தீர்ப்பா சொல்ல ஆரம்பிச்சாங்க. வகுப்பு எடுத்தாங்களே அந்த கிறிஸ்தவக் கல்லூரியில சிறு தெய்வ வழிபாடு செஞ்சா விடுவாங்களா? (அவங்கதான்  படுசெக்யூலர் ஆச்சே.). இல்ல இந்த கம்யூனிஸ்டுகள்தான் அதை ஆதரிப்பாங்களா?

மறுவாசிப்புன்னு இவங்க பண்ற அட்டகாசம் தாங்க முடில. கர்ணன மறுவாசிப்பு செய்வாங்க, மகாபாரதத்த மறுவாசிப்பு செய்வாங்க, இராமாயணத்த மறுவாசிப்பு செய்வாங்க. ஏன் தோழர்களே! கொஞ்ச டெவலப் ஆகி பைபிள் , குரான்னுந்தான் போங்களேன். உங்கள செக்யூலரிசம் எந்த அளவுக்குப் போகுதுன்னு பாப்போம். அதுதான் முடியாதே. இளிச்ச வாயன் யாரு?  

உங்கள் கதையும் சரி, அந்நிய மதங்களின் கதையும் சரி மறுவாசிப்புக்கு தேவையே இல்லையே அனைத்துமே பச்சையா (இல்லை. இல்லை சிவப்பாகத்தானே) கொடூரமாதானே இருக்கும். அதுக்கெல்லாம் எதுக்கு மறுவாசிப்பு. எது நல்ல தரமானதோ அதைத்தானே மறுவாசிப்பு செஞ்சி அசிங்கப்படுத்துவீங்க. 

ஆனால், உங்க வரலாறு பத்தியும் மறுவாசிப்பு வந்திருக்கிறது தோழர்களே. "ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)ன் Animal Farm படித்திருக்கிறீர்களா? அதைச் செய்ய மாட்டீங்களே!

ஆண்டாள் பற்றி  இப்படி ஒரு கதையை இந்த இடங்கை எழுத்தாளர் எழுதி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார், மாணவர்களுக்குத்தான் என்ன சொல்லிக்கொடுக்கலாம் என்று அந்த பல்கலைக்கழகமும் இதைப் பாடத்திட்டத்தில் சேர்க்க சம்மதித்து என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்

.கே. நோன்பு பாடப்புத்தகத்துல வந்தாச்சு? அடுத்து காவல் கோட்டம்தானே? முடிஞ்சா நோன்புக்கு ஏதாவது பெரிய விருதா ஏற்பாடு பண்ணுங்க தோழர்களே!

கீழே பத்திரிகையில் வந்த செய்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 61 கலை, அறிவியல் கல்லூரிகளும், 8 மனோ கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். பாடத்திட்டத்தை வடிவமைக்க மூத்த பேராசிரியர்களில் ஒருவரை தலைவராகவும், சிலரை உறுப்பின ராகவும் கொண்ட குழு அமைக்கப்படும். இதன்படி நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் பியூலா குமாரி தலைமையிலான குழு முதலாம் ஆண்டு முதல் பருவ தமிழ் பாடத்திட்டத்தை தயாரித்தது.

இதில்நோன்பு' என்ற சிறுகதை இடம் பெற்றது. இந்த சிறுகதையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து கடந்த 25ம் தேதிதினகரனில்'' செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், உயர் கல்வித் துறையும் சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் எப்படி இடம் பெற்றது என நெல்லை பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டன. இது மட்டுமல்லாது பல்வேறு தரப்பிடம் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நெல்லை பல்கலை. பதிவாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது, ‘ஆசிரியர் செல்வராஜ் வெளியிட்டநோன்பு' என்ற தலைப்பிலான புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு புத்தகம் மறு பதிப்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக பாடத்திட்டக் குழு தலைவர் பியூலா குமாரி விளக்கம் தெரிவித்துள்ளார் என்றார். தொடர்ந்து நெல்லை பல்கலைக்கழகத்தில் 3 நாட்களாக நிலவி வந்த புயல் ஓய்ந்துள்ளது.
நன்றி: தினகரன் 28.06.2012