தேவையான பொருட்கள்:
அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 கிராம், ஓமம் 35 கிராம், அதிமதுரம் 35 கிராம், சீரகம் 35 கிராம் ஆகியவை
செய்முறை: அமுக்குரா கிழங்கை பசும்பாலில் வேக வைத்து சுத்தி செய்து காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். மற்ற சரக்குகளை (சுக்கு, அதிமதுரம் தவிர) லேசாக வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சுக்கையும் அதிமதுரத்தையும் தனித்தனியாக லேசாக மேல் தோலை நீக்கி தூள் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் எல்லாவற்றையும் ஒன்று கலந்து சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
சிறியவர்கள் 1 ஸ்பூன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு பால் சாப்பிட வேண்டும். பெரியவர்கள் 1½ ஸ்பூன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு பால் சாப்பிட வேண்டும்.
இதுபோல 1½ மாதம் சாப்பிட நரம்புத்தளர்ச்சி, பலஹீனம், அஸ்திவெடை, பித்தபாண்டு, பசிமந்தம், மயக்கம் ஆகியவை தீரும். ஒல்லியான உடல் உள்ளவர்கள் மேற்சொன்ன அளவை நெய்யில் குழைத்துச் சாப்பிட வேண்டும். கணைய நோயினால் இளைத்து மெலிந்து போன குழந்தைகளுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டு பால் சாப்பிட பூரண குணமேற்படும்.
முருங்கைப்பூ, தேற்றான்கொட்டை, நிலப்பனைக்கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு, நீர்முள்ளி விதை, பாதாம் பருப்பு, சாலமிசிரி, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு, கசகசா இவைகளை 10 கிராம் வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேற்றான்கொட்டை, நிலப்பனைக் கிழங்கு, பூமி சர்க்கரைக்கிழங்கு இவைகளைப் பாலில் புட்டவியல் செய்தும் மற்ற சரக்குகளை அப்படியே வெயிலில் நன்றாகக் காயவைத்து தூள் செய்துகொள்ளவும். இரண்டுத் தூள்களையும் நன்றாகக் கலந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சொர்ண பஸ்பம், வெள்ளி பஸ்பம், லிங்க செந்தூரம் இவைகளையும் சேர்த்து 65 மில்லி கிராம் அளவு வெள்ளைக் கற்கண்டுத் தூள் 1\4 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு பால் சாப்பிட வேண்டும். இப்படிச்செய்துவந்தால், உடம்பில் உஷ்ணம் தணிந்து, விந்து, நாதம் இவைகளின் நீர்த்த தன்மை நீங்கி, கெட்டித் தன்மை அடையும். நரம்புத் தளர்ச்சி நீங்கி, உடலில் சுறுசுறுப்பும் தெம்பும் கூடும்.
கசகசா, வாதுமைபருப்பு, வால்மிளகு, கற்கண்டு, ஓரிதழ்தாமரை சமுலம் இவைகள் ஐந்தையும் சம எடை எடுத்து, கசகசா, வாதுமை பருப்பு, வால்மிளகு, ஓரிதழ்தாமரை இவைகளை நன்றாக காயவைத்துத் தூள் செய்து, கற்கண்டையும் தூள்செய்து நன்றாக கலக்கும்படி கலந்து கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவு தூளைப் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இது விசேஷமான தாது புஷ்டியைக் கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியும் போகும். உடலுறவு சிறப்பாக இருக்கும். இதுபோல் இன்னும் நிறைய அனுபவ முறைகள் உள்ளன.
குறிப்பு: சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. சர்க்கரை வியாதிக்கு மருந்து சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம்.
அச்சுநூல் தொகுப்பு
முழுமஹாபாரதம்
செ. அருட்செல்வப்பேரரசன்
14 பாகங்கள் - கெட்டி அட்டையில்
பக்கங்கள்: 12,126
விலை: ₹.12,999/-
வெளியீடு:
எழுத்துப் பிரசுரம் (An imprint of Zero Degree Publishing)
ISBN: 978-93-88860-79-6
விலைக்கு வாங்க:
http://bit.ly/aspabharat
என்ற சுட்டிக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.
அல்லது மேற்கண்ட சுட்டியில் தற்போதைய விலையைப் பார்த்துவிட்டு
ZERO DEGREE PUBLISHING,
Account No. 602805020541 | IFSC code: ICIC0006028
Branch...68, CP Ramaswamy Road, Chennai-600018
என்ற வங்கிக் கணக்கில் மேற்கண்ட சுட்டியில் கண்ட தற்போதைய தொகையைச் செலுத்திவிட்டு, சீரோ டிகிரி பதிப்பகத்தாரின் கைபேசி எண் +91 - 9840065000க்கு உங்கள் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.