மேற்கண்ட படங்களைக் கூர்ந்து கவனியுங்கள்.
தாயை அரசாகவும், பிள்ளையைக் குடிமக்களாவும், பையை நாட்டின் சுமையாகவும் (குடிமக்களின் சுமையாகவும்) உருவகித்துப் பாருங்கள்.
முதல் படத்தில் தாய், பாதுகாப்பாகக் குழந்தையைக் கூட்டிச் செல்கிறாள். தன்னைப் பாதுகாக்கவில்லை. குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மேல் இருக்கும் குழந்தை பையைச் சுமந்து கொண்டிருக்கிறது. இருவரும் சுமக்கிறார்கள். தாய் நினைத்தாலும் அந்தப் பிள்ளையின் சுமையைச் சுமக்க முடியாது.
இரண்டாவது படத்தில் தாய் பாதுகாப்பாகக் குழந்தையைக் கூட்டிச் செல்கிறாள். தானும் பாதுகாப்பாகவே இருக்கிறாள். குழந்தையைச் சுமக்கவில்லை. குழந்தை பையைச் சுமக்கிறது. தாய் நினைத்தால் குழந்தையின் சுமையை வாங்கிக் கொள்ள முடியும்.
மூன்றாவது படத்தில் தாய் பாதுகாப்பாகக் குழந்தையைக் கூட்டிச் செல்கிறாள். ஆனால் தன்னைப் பாதுகாக்கவில்லை. குழந்தையைச் சுமக்கவில்லை. குழந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. தாய் குழந்தையின் சுமையைச் சுமக்கிறாள்.
முதல் படம் - எனக்கு கம்யூனிசமாகப் படுகிறது.
இரண்டாவது படம் - எனக்கு முதலாளித்துவமாகப் (சந்தைப் பொருளாதாரமாகப்) படுகிறது.
மூன்றாவது படம் - எனக்கு கலப்பு பொருளாதாரம் (Mixed Economy)ஆகப் படுகிறது.
முதல் வகை (கம்யூனிசம்) வேண்டவே வேண்டாம் என்றே படுகிறது (கம்யூனிஸ்டுகள் ஆளும் இடங்களிலெல்லாம் பாருங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இருக்காது. [மேலே படத்தில் பாருங்கள், இப்படித்தான் ரோடில்லாமல் சிக்கிக்கொள்ள வேண்டும்]. ஆனால் படையெடுக்க வேண்டுமா? மெனக்கெட்டு இந்திய
எல்லைவரை (சீனா) ரோடு போடுவார்கள்)..
மீதி இரண்டில் எது சிறந்தது?
கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதா? இரண்டாவதுதான் சிறந்ததாக இருக்குமோ?
ஆனால் எனக்கென்னவோ நமக்கு மூன்றாவது வகையே சிறந்தது என்று தோன்றுகிறது.
மாற்றுக்கருத்திருப்பின் அவசியம் மறுமொழியிடவும்.