6 Aug 2012

மக்கள் சீனமும் நம்மவர்களும்

மக்கள் சீனம் குறித்து பேராசிரியர் சந்திரா அவர்களின் கட்டுரையைத் தீக்கதிரில் படித்தேன். அதன் லிங்க் கீழே உள்ளது.
அந்தக் கட்டுரையில் உள்ள சில நெருடல்களைக் குறித்து வைத்துள்ளேன். அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.நமது ஆட்கள் மக்கள் சீனத்திற்குச் சென்று எப்படி மூளை சலவை செய்யப்பட்டுத் திரும்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். 


ஆடு, அதை வெட்டப்போகும் பூசாரிக்குத் தலையை ஆட்டித்தானே பார்த்திருப்பீர்கள். இங்கே ஒரு ஆடு. அந்த பூசாரியிடம் உனக்கு நான் மட்டும் போதாது, என்னைப் போல் இன்னும் பத்துப்பேரையும் உருவாக்குகிறேன் என்று இந்தியா வந்தது போன்ற பிரம்மைதான் எனக்குத் தோன்றுகிறது. பூசாரியும் ரொம்ப நல்லவன்தான்.

 
//மறுநாள் மாவோ பிறந்த ஊரானஷாஷன்` கிராமத்திற்கு சென்றோம். வயது வித்தியாசமின்றி ஏராளமான மக்கள் கைகளில் செங்கொடியை பிடித்துக்கொண்டு மாவோ பிறந்து, வளர்ந்த இடத்தை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.//

எப்படிங்க அப்படி செங்கொடி ஏந்திக்கிட்டுப் போறாங்க. அவங்க என்ன இராணுவமா? அல்லது ரோபோட்டுகளா? சுதந்திர மனிதர்கள் இப்படிச் செய்வார்கள் என்று கனவிலும் நினைக்க முடியாது.

//சிவப்பு-மஞ்சள் நிறம் அங்கு பிரதானமாக இருந்ததைப் பற்றி கேட்டபொழுது, அவை மன்னர்கள் பயன்படுத்தும் நிறமென்றும் சாதாரண மக்கள் இந்த நிறங்களை பயன்படுத்த மன்னர் காலத்தில் தடை இருந்ததாக கூறினார்கள்.//

அதனால் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பயன்படுத்திகிறதாக்கும்.

//அன்று மாலை அருங்காட்சியகம் சென்றோம். கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற இடத்தைப் பார்த்தோம். மாநாடு நடந்து கொண்டிருந்த பொழுது, பிரெஞ்சு ராணுவ தாக்குதலைத் தொடர்ந்து தப்பித்து ஓடி, ஒரு படகில் ஏறி, மாநாட்டு நிகழ்வுகள் நடந்ததை நினைவு கூர்ந்த பொழுது, மெய் சிலிர்த்தது. தலைவர் மாவோ மற்றும் இதர தலைவர்கள் கூடி பேசி முடிவெடுத்த இடம்... (13 கட்சி உறுப்பினர்களை பிரதிபலிக்கும் வண்ணம் 13 நாற்காலிகள் இருந்தன.//

மதங்களுக்கு உள்ள அத்தனை Symbolismகளும் உங்களிடம் உள்ளதே! இது பகுத்தறிவு அப்படித்தானே.

//சீன கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட இடத்தை கண்டு திரும்புகையில், அந்த தெரு முழுவதும் ஒரே மாதிரியான மரங்கள் இருந்ததைக் கண்டோம். எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளர், இந்த மரங்கள் உள்ள பகுதிகள் எல்லாமே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை என்றார். //

என்ன சொல்ல வர்றீங்க!

//அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்சி செயலாளரின் வீட்டிற்குள் நுழைந்ததும் பிரமித்துப் போனோம். இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர்கள் வீடு கூட அவ்வளவு நவீனமாக, கலை உணர்வு டன் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ‘ஹைடெக்சமையலறை, மிகச்சிறந்த வர வேற்பறை, படுக்கையறை என ஒன்றை யொன்று விஞ்சும் வண்ணமிருந்தன.//

பின்ன எப்படிங்க இருக்கும். அதான் மேல்குறிப்பிலேயே சொல்லிட்டீங்களே. மன்னர்கள் பயன்படுத்திய நிறங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று. அப்படி இருக்கும்போது இதுவெல்லாம் சகஜம்தாங்க.

//விவசாயிகள் லெக்சஸ், பென்ஸ் கார்கள் கூட வைத்துள்ளனர். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமைத் தரப்படுகிறது.//

இது உங்களுக்கே முரண்பாடா தெரியலையா?

//சீனாவின் கிழக்கு பகுதிகள், கடலோரப் பகுதிகளில் நல்ல வளர்ச்சி உள்ளது. ஆனால் மேற்கு பகுதிகளில் உள்ள கிராமங்கள் பின் தங்கியுள்ளன. அங்குள்ள விவசாயிகள் ஏழைகளாக உள்ளனர். கிராமங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன என் பதை கட்சி உணர்ந்துள்ளது.//

ஐய்யய்யோ! எப்படிங்க இந்த அநியாயம் நடந்துச்சு. அதுவும் கம்யூனிசம் போற்றும் தேசத்துல. உங்களாலயும் ஏற்ற இறக்கத்தை சரி செய்ய முடியலையா? அதுவும் ஒரு சமத்துவ கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டிலா? எல்லாம் சமமாத்தானே இருக்கணும். ஆனால் வசதியா அது முற்றிலுமான கம்யூனிச தேசமல்ல, கம்யூனிசமாவதற்கு முயற்சி செய்யும் தேசம்னு சொல்லுவீங்க அப்படித்தானே! பலே

//தலைவர் மாவோ உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினோம்.//

அது என்னங்க செவ்வணக்கம். செம்மையான வணக்கமா? அல்லது சிவப்பான வணக்கமா? என்ன அர்த்தம். வணக்கத்திலே செம்மையானது செம்மையல்லாதது என்று இருக்கிறதா? அல்லது வணக்கத்திற்கு ஏதாவது நிறம் இருக்கிறதா என்ன? நீங்க அர்த்தத்தோடு சொல்லி எங்களுக்குத்தான் உங்க மொழி புரியலையா?

//ஆயிரக்கணக்கான மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கைகளில் மலர்களை வைத்துக் கொண்டு அமைதியாக வரிசையில் நின்று, மலரை வைத்துவிட்டு முஷ்டியை உயர்த்துவதையும் வயதானவர்கள் மலர்களை வைத்து விட்டு, மாவோ உடலின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, நமஸ் கரிப்பதைக் கண்ட பொழுது, தலைவர் மாவோ இன்னமும் சீன மக்களின் நாயகன் என்ற உணர்வு ஏற்பட்டது. சீனாவின் வளர்ச்சிப் பாதையில் பல மாற்றங்கள் வந்த பின்பும், தினமும் மாவோவை தரிசிக்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர் என்பது மகிழ்ச்சியூட்டியது.//

இது உண்மைதானா? ஒரு கம்யூனிஸ்ட் தேசத்தில், மக்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்த நமஸ்கரிப்பது, அதுவும் ஒரு கல்லரையின் முன்னால்... என்ன பகுத்தறிவு ... என்ன பயபக்தி, சீக்கிரம் மாவோவை கடவுளாக்கிடுங்க. அப்ப நீங்கதான் பூசாரிகள். மகிழுங்கள் மகிழுங்கள். மனிதர்களைச் சிந்திக்க மட்டும் விட்டுவிடாதீர்கள். அவர்களுக்காக கட்சி மட்டும்தானே சிந்திக்க முடியும்.

//16.7.12 அன்றுஉட்கட்சி ஜனநாயகம்சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அமலாக்கப்படும் விதம் குறித்து கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் வகுப்பு நடைபெற்றது.//

ஆமாம்! இதெல்லாம் வகுப்பு எடுத்து தான் போதிக்கணும். ஏன்னா யாருக்கும் உணரக்கூடிய சத்து இல்லல்ல. ஜனநாயகம். அதுவும் உட்கட்சி ஜனநாயகம்.

//கட்சிக் கிளையை கட்டுவதுதொடர்பாக ஒரு பட்டறை நடத்தப்பட்டது. நமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். கட்சியில் சேர விருப்பம் தெரி வித்தாலும், உடனடியாக சேர்ப்பதில்லை. இரண்டு ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டியுள்ளது. கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் செயல்பாட்டை கண்காணித்து, திருப்தி ஏற்பட்டால்தான், ஒரு நபர் கட்சி உறுப்பினராக ஆக முடிகிறது. எனவே கட்சி உறுப்பினராவது எளிதல்ல.//

ஏன்னா நமக்குத் தோதான ஆட்கள் அகப்படணும்ல. கட்டுப்பாடாத்தான் இருக்கணும். நல்லா மூளைய சலவை செஞ்சு அதோடு சேத்துறாதீங்க. நல்லா காயப்போட்டு அப்புறம் எடுத்து உங்க சிவப்பு பீரோவில் வச்சுக்கங்க.

//தடை செய்யப்பட்ட நகரம்’ (கடிசbனைனநn உவைல) - ராஜாக்கள் ஆட்சி செய்த பொழுது கட்டிய அரண் மனையை (சாதாரண மக்கள் செல்ல முடியாது- தடை- எனவே தடை செய்யப்பட்ட நகரம் என்றழைக்கப்படுகிறது) பார்வையிட்டோம்.//

ஆமாம் நீங்க பார்வையிடாம எப்படி? நீங்க என்ன சாதாரண மக்களா?

//இளம்பெண்கள் மிகவும் குட்டையான ஆடை அணிந்து வேலைக்குச் செல்கின்றனர். பாலியல் துன்புறுத்தல் இல்லை. நகரங்களின் முக்கிய சாலைகளில் சுங்கவரி வசூல் செய்யும் பணிகளில் (247) இளம் பெண்கள் பணியாற்றுகின்றனர். பெண்களிடம் சீண்டினால், அதை செய்வோரின் வேலை, வாழ்க்கை எல்லாம் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.//

அப்படித்தானே இருக்கணும். குட்டையான ஆடை எதற்கு? வசதிக்கா? ஒ... (பாவங்க அந்த நாட்டு ஆண்கள். கண்ணுல மிட்டாய காட்டி, சாப்பிட்டா கொன்னுடுவேன்னு சொன்னா? அதான் உணர்ச்சியே இருக்கக்கூடாதே)

//அவர்களின் ஐந்தாண்டு திட்டத்திலும் இதற்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கூடுமான வரையில் கார்களை தவிர்த்து, சைக்கிள்களுக்கு முக்கியத் துவம் தருகின்றனர். சைக்கிள் பயணம் உட லுக்கும் நல்லது.//

ஏதோ மேல படிக்கிறப்போ விவசாயி கூட கார் வச்சுருக்கான்னு படிச்சாப்பில இருக்கு. என்னங்க சொல்றீங்க.

//குண்டாக இருப்பவர்களை பார்ப்பதே அரிது. சிறுவர்களில் சிலர் குண்டாக இருந்ததை பற்றி கேட்டபொழுது, கே.எப்.சியும், மெக்டொனால்டும் காரணம் என்றார்கள் (ஃபாஸ்ட் ஃபுட்). உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் மிகவும் குறைவு. புரோட் டீன் அதிகம். அதுவும் ஒல்லியாக இருப்பதற்கு முக்கிய காரணம்.//

சூப்பர். கம்யூனிசம். பன்னாட்டு முதலாளிகள் வந்து உங்கள் நாட்டு மக்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்க வழி வகை செய்திருக்கிறீர்களா? அதுதான் சரி.

//அரசு ஒரு திட்டம் தொடர்பாக முடிவெடுத்து விட்டால், கிராமக்கிளை வரை வெகு விரைவில் அமலாக்கும் ஏற்பாடுகள் உள்ளன. கட்சித் தலைவர்கள் முதல், கிளை ஊழியர் வரை ஒரே குரலில் பேசுவதும், கட்டுப்பாட்டுடன் செயல்படுவதும் மிகப்பெரிய பலம் எனத் தெரிகிறது.//

என்னங்க பண்ண ரோபோ வாழ்க்கைதானே. ஒரே குரல்தானே இருக்கும். அதுதான் உங்களுக்குப் பெரிய பலம். அதமட்டும் விட்டுறாதீங்க.

//சோஷலிஸ்ட் சந்தைப் பொருளாதாரம்என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. மார்க்சியத்தின் அடிப்படையை வைத்துக் கொண்டு, சீன நாட்டின் பிரத்யேக அம்சங்களைக் கணக்கிலெடுத்து, சோஷலிச நிர்மாணம் நடைபெறுவதாக அனைத்து விவாதங்களிலும் பேசப்பட்டது. “பூனை வெள்ளையாக இருந்தால் என்ன, கருப்பாக இருந்தால் என்ன, எலியை பிடித்தால் போதும்என்ற டெங்ஷியோபிங்கின் பிரபல மேற்கோள் முன்வைக்கப்படுகிறது. ‘வளர்ச்சிதான் நோக்கம். அனைத்து நடவடிக்கைகளும் அதை யொட்டியே தீர்மானிக்கப்படுகின்றன.//

அப்டிப்போடு "சோஷலிஸ்ட் சந்தைப் பொருளாதாரம்'' சோசலிசத்தில் சந்தைப் பொருளாதாரம் அபாரக் கண்டுபிடிப்பு. சரி இதுல யாரு பூனை? யாரு எலி? ஓ... கட்சி பூனை, மக்கள் எலியா? இப்ப வெள்ளை பூனை கருப்பா மாறிடுச்சா? இல்ல பெயின்ட் மட்டுந்தான் அடிச்சிருக்கீங்களா? வளர்ச்சிக்காக பெயின்ட் பரவாயில்லைங்க. அப்ப வெள்ளையா இருந்தா வளர முடியாது? அப்படித்தானே? அதைத் தெளிவாகச் சொல்லிவிடலாமே!

//உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்திக் காரணிகளை மேம்படுத்தவும் சந்தைப் பொருளாதாரம்/தனியார்மயம் தேவையென்ற வாதம் முன்வைக்கப்பட்டது.//

தேவைக்கேற்ற உற்பத்தியெல்லாம் இல்லை. உற்பத்தி செய்துவிட்டு சந்தையை ஏற்படுத்திக் கொள்வது. அதுவும் டூப்ளிகேட்டுகளாக....

//இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. மொத்தத்தில் பத்துநாள் பயணம், அந்நாட்டின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு பற்றி நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. சீன நிலைமைக் கேற்ப, சோஷலிசத்தை நிர்மாணிப்பதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.//

அப்ப நீங்க ஒன்னும் கத்துக்குடுக்கல. கத்துக்கிட்ட வந்திருக்கீங்க. (அப்ப நல்ல சீன உளவாளியா உங்களையே அறியாம பணிபுரிவீங்க!) நீங்க கத்துக்கிட்டு வந்துட்டீங்கல்ல. இந்தியா உருப்பட்ரும்.

//சோவியத் யூனியன் இல்லாத இன்றைய சூழலில், சோஷலிசத்தை நிர்மாணிக்கும் சீனாவின் முயற்சிகள் வெற்றி பெறுவதன் மூலம், ஒரு துருவ உலகம் அமைவதை நாமும் எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.//

ஒரு துருவ உலகமா? சூப்பர்ங்க. விஞ்ஞானம்.. விஞ்ஞானம்... விஞ்ஞான கம்யூனிசம்.