11 Jan 2013

பாகிஸ்தானும் அக்பருதீன் ஒவைசியும்



ஒரு நாட்டின் எல்லையை ஊடுருவுவதே மிகப் பெரியத் தவறு. அப்படி ஊடுருவி போர் புரிகையில், எதிரி நாட்டு ராணுவத்தினரின் சடலத்தில் இருந்து தலையை வெட்டிக் கொண்டுப் போதல் என்பது தீவிரவாதிகள் பாணியாக இருக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகத்தை இது உலகத்துக்கு காட்டுகிறது.

பாகிஸ்தான் ராணுவமே தீவிரவாத ராணுவமாக செயல்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவம் இப்படி நடந்து கொள்வது கீழ்த்தரமானது.


பாகிஸ்தான் தாக்குதலில் கொல்லப்பட்ட
2 வீரர்கள் உடலுக்கு ராணுவத்தினர் அஞ்சலி
ஜம்மு, ஜன. 10:
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 2 ராணுவ வீரர்கள் உடல்களுக்கு ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கடும் பனிமூட்டம் இருந்ததை பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் சிப்பாய்கள் ஊடுருவினர். ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அரை மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்கள் ஹேம்ராஜ்(29), சுதாகர் சிங்(28) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்திய வீரர்களின் பதிலடியை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தானிய படைகள் பின்வாங்கியது. அப்போது, கொல்லப்பட்ட 2 வீரர்களின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடூர செயல் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லியில், பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த நிலையில், கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களும் தேசிய கொடி போர்த்தப்பட்டு ரஜோரி நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு, துணை கமாண்டிங் அதிகாரி பிரிகேடியர் திவாரி மற்றும் ராணுவத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ஜம்முவுக்கு உடல்கள் கொண்டுவரப்பட்டது. ஜம்முவில் இருந்து விமானம் மூலம் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஹேம்ராஜின் உடல் .பி மாநிலம் மதுரா அருகே உள்ள ஷெர்நகருக்கும், சுதாகர் சிங் உடல் .பி மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள தார்ஹியா கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது.

நன்றி: தினகரன் 2013-01-10

இந்தச்செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார். இந்திய ராணுவம் இந்த ஒரு காரணத்தைச் சொல்லியே ஒரு பெரிய போரை நடத்தலாம். ஆனால் செய்யாது. அதற்கு நமது நாட்டு கட்சிகளே ஆதரவு கொடுக்காது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் நாட்டின் பாதுகாப்பைப் புறந்தள்ளி தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்பதைக் காட்ட போர் தவறானது என்றே சொல்லும்.


காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இறந்த 2 வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்றனர். இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டக்கூடியது. அவர்களது செயல் மனிதாபிமானமற்றது. பாகிஸ்தானிடம் நமது கண்டனத்தை தெரிவிப்போம். மேலும், நமது ராணுவ நடவடிக்கை இயக்குனர் ஜெனரல், பாகிஸ்தான் இயக்குனர் ஜெனரலுடன் இதுபற்றி பேசுவார். நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகி றோம். காஷ்மீரில் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்தோணி கூறினார். பிற்பகலில் கொல்கத்தா சென்ற அந்தோணியிடம் தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது பற்றி கேட்டபோது, “இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மை. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளதுஎன்றார்.
குர்ஷித் பேட்டி:
டெல்லியில் நேற்று, பேட்டியளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், “பாகிஸ்தான் ராணுவ தாக்குதலும் இந்திய வீரர்களை கொன்ற கொடூரமான செயலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் இதை உடனடியாக தடுக்காவிட்டால், நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ் தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டதுஎன்றார்.
நன்றி: தினகரன் 2013-01-10


இப்படிப்பட்ட காரியத்தையும் செய்துவிட்டு, பேச்சுவார்த்தை பாதிக்காது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சண்டை நிறுத்த மீறலால் அமைதி நடவடிக்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு பாதிப்பு ஏற்படாது என்பது என் நம்பிக்கை. அமைதி பேச்சுவார்த்தையில் எந்த பின்னடைவும் ஏற்படாது என்று நம்புகிறேன். இரு நாடுகளும் நிலைமையை சரி செய்ய தங்களுடைய பங்களிப்பை அளிக்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் .நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் மூலம் இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்துவதில் பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஏனெனில், எங்களிடம் ரகசியம் எதுவும் இல்லை.
இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால், இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக சில விரும்பத்தகாத அறிக்கைகள் மற்றும் சூழ்நிலைகள் ஆகியவற்றால் நிலைமை மோசமானது.
பாகிஸ்தான் மக்களும், அரசும், இந்தியா உடனான உறவு மேம்பட வேண்டும் என்றும், இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும்தான் விரும்புகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலைமை மோசமடையச் செய்யும் எந்த நடவடிக்கையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு ஹினா ரப்பானி கர் கூறினார்.
நன்றி: தினகரன் 2013-01-11

அமெரிக்கா இங்கும் தனது பெரியண்ணன் தனத்தைக் காட்டுகிறது பாருங்கள். இந்தியா அமைதி காக்க வேண்டுமாம். இதே ஏதோ ஒரு நாட்டில் ஒரு அமெரிக்க ராணுவத்தின் சிப்பாயை இப்படி ஏதாவது ஒரு நாடு செய்திருக்கட்டும் அமெரிக்கா விடுமா? நாட்டை விடுங்கள். ஏதோ ஒரு நாட்டின் தீவிரவாத அமைப்பு செய்திருந்தாலே அந்த நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் அமெரிக்கா. தனக்கு என்றால் ஒன்று. இழிச்சவாயன் என்றால் மற்றொன்று. சூப்பர் சர்வதேச அரசியலைச் செய்கிறது அமெரிக்கா.

பாகிஸ்தான் ஏற்கனவே சீன ஆதரவுடன் இருக்கிறது. இலங்கையில் சீனாவின் ராணுவத்தளமே அமைந்துவிட்டது. பங்களாதேஷ் சீனாவிடம் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிச் சுற்றி சுற்றி ஆபத்தையே வைத்திருக்கும் இந்தியா அமைதி காக்க வேண்டுமாம். இதே இந்திய ராணுவம் இப்படிச் செய்திருக்கட்டும் உலகமே இந்தியாவை எதிர்க்கும்.


இந்நிலையில் இந்தியாவிற்குள்ளேயே, ஆந்திரா மாநிலம் மஜ்லிஸ் இதேஹாதுல் முஸல்மீன்(MIM) கட்சியின் எம்.எல். அக்பருதீன் ஒவைசி கடந்த டிச.24ம் திகதி பொது மக்கள் முன்னிலையில் நிகழ்த்திய உரை:
"15 நிமிடங்களுக்கு காவல்துறை அகற்றப்பட்டால், 100 கோடி இந்துக்களை தாம் அழித்துவிட முடியும்". மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அஜந்தாவில் உள்ள எல்லோரா குகை சிற்பங்களையும் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார். கோசலை எங்கெல்லாம் சென்று ராமனைப் பெற்றாள் என்று கேட்டிருக்கிறார்.

இவர் முன்னாள் ஹைதராபாத் சுல்தானின் பரம்பரை என்பது கூடுதல் செய்தி. பாகிஸ்தானில் உள்ள ஒரு இந்து இதே போல் இஸ்லாமியர்களை அவமதித்து இப்படிப் பேசியிருந்தால் அவனது நிலை அங்கே என்ன?