சட்டென்று எழுந்து கிழவிக்கு
இடம் கொடுத்தான்
இரக்கத்தால் என்று நினைத்தேன்
பின்னால் நின்றாய் நீ
உன் கை மேல் கை வைத்து பிடித்தான்
நீ தடுக்கவில்லை
மகளே!
இளவரசன் உடலைத்
தோண்டி தோண்டி எடுத்து
நாறடிப்பது தெரியவில்லையா?
இரண்டு தாயின் நெஞ்சில்
நெருப்பள்ளி கொட்டுகிறீர்கள்!
இரண்டு அப்பனின் உயிருக்கு
உத்தரவாதம் இல்லை!
இரண்டு குடும்பத்தின் மானத்திற்கு
உலை வைத்துவிட்டீர்கள்
இரண்டு ஊரின் போர்க்களத்திற்கும்
எரியூட்டலுக்கும் வித்திட்டுவிட்டீர்கள்
கடைசியாக உங்கள் தலையிலும்
மண்ணை வாரிப்போட அஸ்திவாரமிட்டுவிட்டீர்கள்!
மகளே!
எந்தத் தாய் பெற்றாளோ உன்னை
எப்பாடு பட்டாளோ வளர்த்து ஆளாக்க!
யூனிபார்ம் போடும் வயதிலே
துணை கேட்கலாமா நீ?
ஆவி பிடித்து ஆட்டாமல் இருக்க
கருப்புக்கயிறும் இரும்புச் சக்கரமும் கட்டி
உனக்குப் பாதுகாப்பு வளையமிடும் தாயால்
உனக்குச் சரியான துணை தேடத் தெரியாதா?
- பேருந்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு, எனது சித்தி N.பிரபா பிரேம்குமார் அவர்கள் கோபத்தால் எழுதிய கவிதை