பாண்டவர்களின் கதையே மையச் சரடானாலும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி, நளன் தமயந்தி, சத்யவான் சாவித்ரி போன்ற புகழ்பெற்ற கதைகளின் மூலமும் மஹபாரதமே. மஹாபாரதத்தில் பேசப்படாத நீதிகளேதும் இல்லை; தத்துவங்களேதுமில்லை. நம் பண்டைய ஞானத்தின் எடுத்துக்காட்டுகளாகத் திகழும் நாரதநீதி, தர்மவியாதர் ஞானம், விதுரநீதி, சனத்சுஜாதீயர் ஞானம், பகவத்கீதை, பீஷ்மநீதி, மோக்ஷதர்மம் ஆகியவையும் மஹாபாரதத்தில் உள்ளவையே.
கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகளும், கும்பகோணம் தமிழ்ப்பதிப்பும், வில்லிபாரதமும் ஒப்பிடப்பட்டு ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் சுட்டிக் காட்டப்படுவதால், இந்தப் பதிப்பு முழுமையான மஹாபாரதத்தை ஒரு பரந்துபட்ட பார்வையில் பார்க்க உதவும். படிக்கும் ஒவ்வொருவர் மனத்தையும் ஆய்வில் ஆழ்த்தும்.
கெட்டி அட்டையில் 14 பாகங்களாக வெளிவரயிருக்கும் இத்தொகுப்பின் விலை ரூ.12,999/- ஆகும்.
இது 2020 ஜன் மாத இறுதி வரை ரூ.9,999/-க்கு முன்பதிவு சலுகையாக கிடைக்கும்.
முன்பதிவு செய்பவர்களின் கைகளில் 2020 ஜூலை மாத இறுதியில் இருக்கும்.
இத்தொகுப்பை வாங்க விரும்புவோர் பின்வரும் சுட்டியில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள் : https://bit.ly/zdparasan
***
சொர்க்கத்தை அடைபவனின் மனநிறைவை விட, இந்தப் புனிதமான வரலாற்றைக் கேட்பதால் அடையும் மனநிறைவு மேலானது.(46) மஹாபாரதத்தைக் கேட்கவோ, மதிப்புடன் கேட்கப்படும் ஏற்பாடோ செய்யும் அறம்சார்ந்த மனிதன், ராஜசூய வேள்வி செய்வதாலும், அசுவமேத வேள்வி செய்வதாலும் கிடைக்கும் பலனைப் பெறுவான்.(47) ரத்தினங்களின் சுரங்கமாகவும், பெரும் கடலாகவும், பெருமலை மேருவாகவும் பாரதம் போற்றப்படுகிறது.(48) இந்த வரலாறு வேதத்திற்கிணையானதும், புனிதமானதும், அற்புதமானதுமாகும். மஹாபாரதம், கேட்பதற்குத் தகுதியானது, காதுகளுக்கு இனிமையானது, பாவங்களைப் போக்கவல்லது, அறம் வளர்க்கவல்லது.(49) ஒருவன் மஹாபாரதத்தின் ஒரு பிரதியைக் கேட்பவருக்குக் கொடுப்பானேயானால், கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழு பூமியையே அவருக்குப் பரிசாகக் கொடுத்ததாகப் பொருளாகும்.(50)
- ஆதிபர்வம் 62:46-50
***
இவ்வலைப்பூவின் வாசகர்களும், நண்பர்களும், இத்தொகுப்பை வாங்கியும், இந்தப் பதிவைப் பலருக்குப் பகிர்ந்தும் ஆதரவளிக்க வேண்டுகிறேன். இயன்ற நண்பர்கள், இயன்ற அளவுக்கு இந்தத் தொகுப்பை வாங்கி தகுந்த நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் பரிசாக அளிக்க முன் வர வேண்டும்.
இஃது ஏற்போர், மறுப்போர், வெறுப்போர் என ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகத் தொகுப்பாகும்.
மிக்க நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202005221020